நேபாள புதிய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: காரணம் என்ன?

நேபாள புதிய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: காரணம் என்ன?
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாள நாட்டில் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது கடந்த மாதம் புதிதாக ஆட்சிக்கு வந்த பிரதமர் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கடந்த மாதம் 27-ம் தேதி நேபாள பிரதமராக 35 வயதான பாலேந்திர ஷா பதவியேற்றார். இந்நிலையில், அவரது அரசு மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அங்கு சர்மா ஒலி தலைமையிலான அரசு, கவிழ்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜென் ஸீ தலைமுறையினரின் போராட்டம். அதன் பின்னர் இடைக்கால நேபாள அரசை சுசிலா கார்கி வழிநடத்தினார். இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாலேந்திரா ஷா வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

அவரது ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் கூட பூர்த்தியாகாத நிலையில் மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் 100 ரூபாய்க்கு கூடுதலான மதிப்பு கொண்ட பொருட்களின் மீது கட்டாயச் சுங்க வரியை விதிக்கும் அரசின் முடிவு, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்புகளை தடை செய்யும் அரசின் கொள்கை மற்றும் உள்துறை அமைச்சர் சுதான் குருங் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் நிதி முறைகேடு காரணமாக அவர் பதவி விலக வேண்டியும் நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது வருகிறது.

புதிய அரசின் சுங்க வரிக் கொள்கை எல்லையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நேபாள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி ஒரே நேரத்தில் அரசின் கொள்கை, மாணவர் அமைப்பினர் மற்றும் அமைச்சர் மீதான குற்றச்சாட்டு என்று மூன்று விதமான அழுத்தங்களை பாலேந்திர ஷாவின் அரசு எதிர்கொண்டுள்ளது.

நேபாள புதிய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: காரணம் என்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in