“கண்ணீர் சிந்த மாட்டோம்... உறுதியுடன் போராடுவோம்!” - நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

வெள்ளப் பேரிடரால் பாதித்த நேபாளத்தில் தொடரும் மீட்பு, நிவாரணப் பணிகள். 

வெள்ளப் பேரிடரால் பாதித்த நேபாளத்தில் தொடரும் மீட்பு, நிவாரணப் பணிகள். 

Updated on
1 min read

காத்மாண்டு: போட்டேகோஷி ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை உறுதியுடனும் தைரியத்துடனும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளம் - திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், கடைகள், சாலைகள், பாலங்கள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பாதிப்பு குறித்து நேபாள நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் பாலேந்திர ஷா, “இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டின் தலைமை தைரியம், ஆதரவு மற்றும் உறுதியை வழங்க வேண்டும். இந்த யதார்த்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். கண்ணீர் சிந்த மாட்டோம்.

<div class="paragraphs"><p>நேபாள பிரதமர் பாலேந்திர ஷா | கோப்புப் படம்</p></div>

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா | கோப்புப் படம்

ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், இது ஒட்டுமொத்த நாட்டின் இதயத்திலும் விழுந்த அடி. இதற்கு எதிராக உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் போராடுகிறோம்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றன.

ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் ஹெலிகாப்டர்களும் தேவை கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருவதுடன் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு மற்றும் தங்கமிடங்களை வழங்கி வருகிறது.

மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றை மீட்டெடுக்க அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>வெள்ளப் பேரிடரால் பாதித்த நேபாளத்தில் தொடரும் மீட்பு, நிவாரணப் பணிகள்.&nbsp;</p></div>
ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in