மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு

தேசிய பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பியது இந்தியா
மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
Updated on
1 min read

கொழும்பு: இலங்​கை​யில் டிட்வா புயல் காரண​மாக வெள்​ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்​கொள்​வதற்​காக, இலங்கை அதிபர் அனுர குமார திச​நாயகே அவசர நிலையை அறி​வித்​துள்​ளார். இலங்​கை​யில் மீட்புப் பணி​களை மேற்​கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு​வைச் சேர்ந்த 80 வீரர்​களை இந்​தியா நேற்று அனுப்​பியது.

வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் இலங்​கையை கடந்​த​போது பலத்த காற்​றுடன் கனமழை பெய்​தது. இதில் பல கட்​டிடங்​கள் சேதம் அடைந்​தன. வெள்​ளப்பெருக்கு மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 123 பேர் உயி​ரிழந்​தனர். 130 பேரை காண​வில்​லை. இதனால் உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் எனத் தெரி​கிறது. காயம் அடைந்த பலர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். மருத்து​வர்​கள் சங்​கம் அதிபர் திச​நாயகேவுக்கு அனுப்​பிய கடிதத்தில் இலங்​கை​யில் அவசர நிலையை அமல்​படுத்த வேண்டும் என வலி​யுறுத்​தி​யது.

இதுகுறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக அனைத்​துக் கட்சி கூட்​டம் நேற்று முன்​தினம் கூட்​டப்​பட்​டது. அவசரநிலையை அறிவிக்க வேண்​டும் என எதிர்க்​கட்சி தலை​வர்​கள் வலியுறுத்தினர். இதையடுத்து இலங்​கை​யில் அவசரநிலை அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக நேற்று அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

வெள்ள பாதிப்பு பகு​தி​களில் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களை விரைவுபடுத்த விதி​முறை​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. நெருக்​கடி நிலையை சமாளிக்க பாதுகாப்புப் படை​யினர், சுகா​தாரப் பணி​யாளர்​கள், உள்​ளாட்சி நிர்​வாக அதி​காரி​கள் தேவை​யான இடங்​களில் விரை​வில் பணியமர்த்​தப்​படு​வர்.

80 இந்​திய வீரர்​கள்: இலங்​கை​யில் வெள்ள மீட்பு பணி​களில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழு​வைச் சேர்ந்த 80 வீரர்​களை விமானப்​படை விமானம் மூலம் இந்​தியா நேற்று அனுப்​பியது. இவர்​கள் படகு​கள், மரம் வெட்​டும் உபகரணங்​கள், தகவல் தொடர்பு சாதனங்​கள், முதலுதவி பொருட்​களு​டன் சென்றுள்ளனர். அண்டை நாடான இலங்​கைக்கு உதவும் ஆபரேஷனுக்கு சாகர் பந்து நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக தேசிய பேரிடர் மீட்​புக் குழு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

மழை வெள்ள நிவாரண பணிக்காக இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை தேவை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in