நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை தேவை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை தேவை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
Updated on
1 min read

திருச்சி: ‘டிட்வா புயல் காரணமாக நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 63 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் இரவு 11.30 மணிக்கு வேதாரண்யத்துக்கு மிக நெருக்கமாக 23 கி.மீ. வரை வந்து அமைந்தது.

இந்த புயல் இன்று(நவ.30) காலை சற்று விலகி நாகைக்கு 40 கி.மீ. கிழக்கே அமையும். அதன் பிறகு படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து, இன்றிரவு மற்றும் நாளை (டிச.1) வடகடலோரம் அருகில் இருந்து சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு தொடர் கனமழையைக் கொடுக்கும்.

நெல்லூர் வரை சென்று ஒரு நீண்ட வளைவு (யூ டர்ன்) எடுத்து திரும்பி சென்னைக்கு கிழக்கே டிச.2, 3 ஆகிய தேதிகளில் நகர்ந்து டிச.4, 5 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து செயலிழந்து, சாதாரண தாழ்வு பகுதியாகவோ அல்லது ஒரு காற்று சுழற்சியாகவோ மாறி டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் ஊடாக அரபிக்கடல் நோக்கி நகரும். இதன் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை இருக்கும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கும் மழை, இன்று (நவ.30) காலை முதல் தொடர் லேசான மழையாக தொடங்கி, பிற்பகலுக்குப் பிறகு மிதமான மழையாகவும், மாலையில் இருந்து தொடர் கனமழையாகவும் நாளை (டிச.1) காலை வரை தொடரும்.

இதேநேரத்தில் மத்திய உள்மாவட்டங்களுக்கும், வட உள் மாவட்டங்களுக்கும் மிதமான முதல் சற்று கனமழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் நாளை (டிச.1) வரை பெய்யும் மழை காரணமாக வெள்ளப்பாதிப்பு கள் இருக்கும் என தெரிகிறது. எனவே, நாகை முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை தேவை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in