தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.  இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டு அதிபர் சிரில் ராமபோசா உற்சாகமாக வரவேற்றார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டு அதிபர் சிரில் ராமபோசா உற்சாகமாக வரவேற்றார்.

Updated on
1 min read

ஜோகன்னஸ்பர்க்: தென்​னாப்​பிரிக்​கா​வின்​ ஜோகன்​னஸ்​பர்க்​ நகரில்​ ஜி20அமைப்​பின்​ உச்​சி மா​நாடு நேற்​று தொடங்​கியது. இந்​த மா​நாட்​டில்​ ஜி20 உறுப்​பு நாடு​கள்​ மற்​றும்​ நட்​பு நாடு​கள் என 42 நாடு​களைச்​ சேர்ந்​த தலை​வர்​கள்​ பங்​கேற்​றனர்​. அவர்​களில்​ பலருடன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார்​.

குறிப்​பாக இத்​தாலி அதிபர்​ ஜார்​ஜி​யா மெலோனி​யுடன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார்​. உக்​ரைன்​ போர்​ உள்​ளிட்​ட சர்​வ​தேச விவ​காரங்​கள்​ குறித்​து இரு தலை​வர்​களும்​ வி​வா​தித்​த​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

பிரேசில்​ அதிபர்​ லூயிஸ்​ இனாசியோ லூலா டா சில்​வா, மா​நாட்​டின்​போது பிரதமர்​ மோடியை அவர்​ ஆரத்​ தழு​வி வாழ்த்​து தெரி​வித்​தார்​. இரு​வரும்​ சிறிது நேரம்​ நட்​புடன்​ கலந்​துரை​யாடினர்​. இரு நாடு​கள்​ இடையி​லானபொருளா​தா​ர உறவை வலுப்​படுத்​த இரு தலை​வர்​களும்​ உறு​தி​யேற்​றனர்​. ஐ.நா. சபை​யின்​ பொதுச்​செய​லா​ளர்​ அந்​தோணி​யா குத்​தேரஸ்​ மற்​றும்​ ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின்​ முக்​கிய நிர்​வாகி​களு​ட​னும்​ பிரதமர்​ மோடி தனித்​தனி​யாக பேசி​னார்​.

பிரிட்​டிஷ் பிரதமர்​ கெய்ர்​ ஸ்டார்​மர்​, பிரதமர்​ மோடியை சந்​தித்​துப்​ பேசி​னார்​. இரு​வரும்​சிறிது நேரம்​ உரை​யாடினர்​. ஆஸ்​திரேலிய பிரதமர்​ அந்​தோணி அல்​போன்​ஸ்​, கன​டா பிரதமர்​ மார்ச்​ கார்​னி, பிரதமர்​ மோடி ஆகிய 3 தலை​வர்​களும்​ தனி​யாகபேச்​சு​வார்த்​தை நடத்​தினர்​. தென்​கொரிய அதிபர்​ லீ ஜே மியூங்​கை பிரதமர்​ மோடி சந்​தித்​துப்​ பேசி​னார்​.

இதுதொடர்​பாக அவர்​ சமூக வலை​தளத்​தில்​ வெளி​யிட்​ட பதி​வில்​, “தென்​கொரிய அதிபர்​ மியூங்​கை 2-வது முறை​யாக சந்​தித்​துப்​ பேசு கிறேன்​. இரு நாடு​கள்​ இடையி​லான பொருளா​தா​ர உறவை வலுப்​படுத்​த ஆலோ​சனை நடத்​தினேன்​” என்​று தெரி​வித்​தார்​.

ட்ரம்ப்​, புதின்​, ஜின்​பிங்​ஜி20 உச்​சி மா​நாட்​டில்​ அமெரிக்​க அதிபர்​ டொனால்​டு ட்ரம்ப்​ பங்​கேற்​க​வில்​லை. தென்​னாப்​பிரிக்​கா​வில்​ வெள்​ளை​யின மக்​களுக்​கு எதி​ராக பல்​வேறு கொடுமை​கள்​ நடை​பெறு​வ​தால்​ மா​நாட்​டை புறக்​கணிப்​ப​தாக அவர்​ விளக்​கம்​ அளித்​துள்​ளார்​. உக்​ரைன்​ போர்​ காரண​மாக ரஷ்ய அதிபர்​ விளாடிமிர்​ புதினைகைது செய்​ய சர்​வ​தேச நீதி​மன்​றம்​ வாரன்ட்​ பிறப்​பித்​திருக்​கிறது.

இதன்​ காரண​மாக அவரும்​ மா​நாட்​டில்​ கலந்​து கொள்​ள​வில்​லை. சீன அதிபர்​ ஜி ஜின்​பிங்​குக்​கு உடல்​நிலை பா​திப்​பு ஏற்​பட்​டிருப்​ப​தாகக்​ கூறப்​படு​கிறது. இதன்​ காரண​மாக அவர்​ மா​நாட்​டில்​ பங்​கேற்​கவில்​லை. அவருக்​கு பதிலாக சீன பிரதமர்​ லீ கெச்​சி​யாங்​ மா​நாட்​டில்​ கலந்​து கொண்​டார்​.

முன்​ன​தாக தென்​னாப்​பிரிக்​காவை சேர்ந்​த இந்​தி​ய வம்​சாவளி தொழில​திபர்​களு​டன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்​. அப்​போது, இந்​தி​யா, தென்​​னாப்​பிரிக்​கா இடையி​லான உறவை வலுப்​படுத்​த ​பால​மாக செயல்​பட வேண்​டும்​ என்​று அவர்​களை கேட்​டுக்​ கொண்​​டார்​.

<div class="paragraphs"><p>தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.  இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டு அதிபர் சிரில் ராமபோசா உற்சாகமாக வரவேற்றார். </p></div>
பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள சர்வதேச சுகாதாரக் குழு: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in