“மோடியும் என்னைப் போன்றவர்... அவருக்குத் தூக்கம் வராது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

“மோடியும் என்னைப் போன்றவர்... அவருக்குத் தூக்கம் வராது” -  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
Updated on
1 min read

வாஷிங்டன்: இந்​தி​யப் பிரதமர் மோடியும் என்​னைப் போன்​றவர், அவருக்​குத் தூக்​கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்​கத் தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​தார்.

அமெரிக்​க-இந்​திய உத்​தி​சார் கூட்​டாண்மை உச்​சி​ மா​நாடு வாஷிங்​டனில் நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் பேசி​ய​தாவது: 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப்​புடன் மியாமி​ யில் நடந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றேன். அப்​போது அவர் என்னை உடனே பிரதமர் மோடியை தொலைபேசி​யில் அழைக்​கு​மாறு தெரிவித்தார். அதற்கு நான் சற்று தயங்​கி, இந்​தி​யா​வில் தற்​போது காலை 6 மணி என்று தெரி​வித்​தேன்.

இதற்கு அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, பிரதமர் மோடி தூங்​கவே மாட்​டார். அவர் என்​னைப் போன்​றவர். அவர் எப்​போதோ படுக்​கையி​லிருந்து எழுந்து விட்​டிருப்​பார் என்று பாராட்​டு தெரிவித்தார். இந்​தச் சம்​பவம் அதிபர் ட்ரம்புக்​கும் மோடிக்​கும் இடையி​லான தனிப்​பட்ட பிணைப்பை காட்​டு​கிறது. சில தலைவர்களு​டன் நாங்​கள் சந்​திப்​பு​களைத் திட்​ட​மிடு​கிறோம், ஏனென்​றால் அவர் பிரதமர் மோடிக்கு கொடுக்கும் அதே மதிப்பைக் கொடுப்​பதில்​லை.

அமெரிக்​கா-இந்​தியா ஆகிய 2 நாடு​களின் உறவு​களின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் அடுத்த 2 ஆண்​டு​கள் முக்​கிய​மானவை. அடுத்த 2 ஆண்​டு​கள், இந்த உறவை வரவிருக்​கும் பல பத்​தாண்​டு​களுக்​கான பாதை​யில் செலுத்​தும். வர்த்​தகம், முதலீடு, பாது​காப்பு மற்​றும் தொழில்​நுட்​பம் போன்ற துறை​களில் உறுதியான முடிவு​களை வழங்​கு​வ​தில் இரு அரசுகளும் கவனம் செலுத்​துகின்​றன. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

“மோடியும் என்னைப் போன்றவர்... அவருக்குத் தூக்கம் வராது” -  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in