செங்கடல் பகுதியில் சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

செங்கடல் பகுதியில் சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
Updated on
1 min read

ரியாத்: செங்கடல் பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்​ளது. இந்த தாக்​குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்​லை.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலால் ஹார்​முஸ் ஜலசந்தியில் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதன் காரண​மாக சவுதி அரேபியா உள்​ளிட்ட வளைகுடா நாடு​களின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது. தற்​போது ஹார்​முஸ் ஜலசந்​திக்கு மாற்றாக செங்​கடலின் பாப் எல் மண்​டேப் ஜலசந்தி வழி​யாக சவுதி அரேபிய நிறு​வனங்​கள் கச்சா எண்​ணெயை ஏற்​றுமதி செய்து வரு​கின்​றன.

இந்த ஜலசந்தி அருகே ஈரானின் நட்பு நாடான ஏமன் அமைந்துள்ளது. ஏமனின் பெரும்​பகு​தியை ஆட்சி செய்யும் ஹவுத்தி கிளர்ச்​சிப் படைக்​கும் சவுதி அரேபி​யா​வுக்​கும் இடையே 11 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. தற்​போது ஈரானின் உத்​தர​வின்​படி செங்​கடலின் பாப் எல் மண்​டேப் ஜலசந்தி வழி​யாகச் செல்​லும் சவுதி அரேபிய எண்​ணெய் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்​சிப் படை ஏவு​கணை​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்த சூழலில் சவுதி அரேபி​யா​வின் யான்பு துறை​முகத்​தில் இருந்து புறப்​பட்ட அந்த நாட்​டின் எண்​ணெய் கப்​பல் நேற்று செங்​கடல் பகு​தி​யில் சென்று கொண்​டிருந்​தது. அப்​போது கப்​பலை குறிவைத்து ஏவு​கணை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கப்​பல் தீப்​பிடித்து எரிந்​தது. இந்த தாக்​குதலுக்கு யாரும் பொறுப்​பேற்​க​வில்​லை. வழக்​க​மாக தாக்​குதலுக்கு பொறுப்​பேற்​கும் ஹவுத்தி கிளர்ச்​சிப் படை இந்த முறை மவுனம் காத்து வரு​கிறது. இதனால் ஏவு​கணை தாக்​குதலை நடத்​தி​யது யார் என்​பது குறித்து சவுதி அரேபிய கடற்​படை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

செங்கடல் பகுதியில் சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
மருத்துவ காலியிடங்களை தமிழகத்திடம் ஒப்படைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in