கடனுக்கு உத்தரவாதம் அளித்ததால் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு

கடனுக்கு உத்தரவாதம் அளித்ததால் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

லண்டன்: து​பாய் வைர நிறு​வனம் ஒன்​றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்​தர​வாதம் அளித்​த​தால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்​டன் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

வைர வியா​பாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்​கி​யில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு லண்​டன் சிறை​யில் உள்ளார். அவரை இந்​தி​யா​வுக்கு அனுப்ப மத்​திய அரசு சார்​பில் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்து அவர் மனித உரிமை​களுக்​காக ஐரோப்​பிய நீதி​மன்​றத்​தில் மனு செய்​துள்​ளார்.

இந்​நிலை​யில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவ​காரம் வெளிவரு​வதற்கு முன்​பாக கடந்த 2012-ல் துபாயைச் சேர்ந்த பையர்​ஸ்​டார் டைமண்ட் நிறு​வனம் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் கடன் பெற நீரவ் மோடி உத்​தர​வாதம் வழங்கி உள்​ளார்.

ஆனால் இந்​நிறு​வனம் கடனை திருப்​பிச் செலுத்​தாத​தால் சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்​தது. நீரவ் மோடி உத்​தர​வாதம் அளித்​த​தால், அவர் அந்தக் கடனை அடைக்க லண்​டன் சிறை​யில் உள்ள நீரவ் மோடிக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது.

இதை எதிர்த்து லண்​டன் வர்த்தக நீதி​மன்​றத்​தில் நீரவ் மோடி மனுத் தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்த லண்​டன் நீதி​மன்​றம், பையர்​ஸ்​டார் குழும கடனை திருப்​பிச் செலுத்​த​வில்லை என்​றால், தான் திருப்​பிச் செலுத்​து​வ​தாக நீரவ் மோடி உத்​தர​வாதம் அளித்துள்​ள​தால், அந்​நிறு​வனம் திருப்​பிச் செலுத்​தாத ரூ.100 கோடியை பாங்க் ஆப் இந்​தி​யா​வுக்கு நீரவ் மோடி திருப்​பிச் செலுத்த வேண்டும் என தீர்ப்​பளித்​துள்​ளது.

கடனுக்கு உத்தரவாதம் அளித்ததால் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
500 மின்சார பேருந்து டெண்டர் ரத்து: தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in