

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர். இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்திச் சேனல் அலுவலகத்துக்கு வெளியில் அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஹம்சா தாக்குதலுக்கு ஆளானது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மே மாதம் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுடப்பட்டார். பிறகு அவர் குணமடைந்தார்.