‘அடுத்த ஒபாமா’ என வர்ணிக்கப்படும் ஜான் ஓசாஃப்: அமெரிக்க அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் இளம் தலைவர்!

‘அடுத்த ஒபாமா’ என வர்ணிக்கப்படும் ஜான் ஓசாஃப்: அமெரிக்க அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் இளம் தலைவர்!
Updated on: 
1 min read

வாஷிங்​டன்: அமெரிக்க இடைக்கால தேர்தல், ஜார்​ஜியா மாகாணத்​தில் ஜனநாயகக் கட்சி எம்பி ஜான் ஓசாஃப் (39) மீண்​டும் வெற்றிபெற்று தனது செனட்​டர் பதவியைத் தக்​க​வைத்​துக் கொண்டுள்​ளார்.

ட்ரம்ப் நிர்​வாகத்​தின் மீதான கடுமை​யான விமர்​சனங்​களாலும், முன்​னாள் அதிபர் பராக் ஒபா​மாவை நினை​வூட்​டும் ஆளுமையாலும் கவனம் ஈர்த்​துள்ள அவர், 2028 அமெரிக்க அதிபர் தேர்​தலுக்​கான முக்​கிய போட்​டி​யாள​ராக உரு​வெடுத்​துள்​ளார். 2021-ல் மிகக் குறைந்த வாக்கு வித்​தி​யாசத்​தில் வென்​ற​போது, அவரை ‘தற்​செய​லான செனட்​டர்’ என அரசி​யல் நிபுணர்​கள் அழைத்​தனர். ஆனால், ஐந்து ஆண்​டு​களுக்​குப் பிறகு, 2024-ல் ட்ரம்ப் வென்ற மாநிலத்​திலேயே தனது இடத்​தைத் தக்​க​வைத்துள்ளார்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ட்ரம்ப்பை கடுமை​யாக விமர்​சித்து அவர் கவனம் ஈர்த்​தார். அதிபரும் அவரது குடும்​ப​மும் ஊழலில் ஈடு​படு​வ​தாக​வும், அவரது அரசு ஜனநாயகத்​துக்கு அச்​சுறுத்​தலாக உள்ளதாக​வும் குற்​றம்​சாட்​டி​னார். ட்ரம்ப்​பை​யும் அவரது ஆதர​வாளர்​களை​யும் ‘எப்​ஸ்​டீன் வர்க்​கம், மார்​-எ-லாகோ (புளோரி​டா​வில் உள்ள ட்ரம்ப்​பின் சொகுசு விடுதி மற்​றும் இல்​லம்) மாஃபி​யா’ என அவர் குறிப்​பிட்ட காணொலிகள் வலை​தளங்​களில் வைரலாகின.

வெற்​றிக்​குப் பிறகு அட்​லாண்​டா​வில் பேசிய ஓசாஃப், ட்ரம்ப்பை தோல்​வியடைந்த அதிபர் என விமர்​சித்​தார். ஊழலை​யும் திறமையின்​மை​யை​யும் மக்​கள் நிராகரித்​து​விட்​ட​தாக​வும், ட்ரம்ப்பின் தீமை​யைக் கட்​டுப்​படுத்​து​வதோடு அதன் ஆழமான பாதிப்​பு​களைக் குணப்​படுத்​து​வதே நமது பணி என்​றும் அவர் கூறி​னார்.

சிறந்த பேச்​சுத்​திறன், மித​மான-​முற்​போக்​குக் கொள்கை மற்​றும் சட்​டைக் கைகளை மடித்​து​விட்​டுப் பேசும் தோற்​றம் ஆகிய​வற்​றால் ஓசாஃப், பராக் ஒபா​மாவுடன் (அடுத்த பராக் ஒபா​மா) ஒப்​பிடப்​படு​கிறார்.

மூத்த தலை​வர்​கள் நிறைந்த அமெரிக்க அரசி​யலில் ஓசாஃப் ஒரு இளமை​யான மாற்​றாகப் பார்க்​கப்​படு​வ​தாகப் பத்​திரி​கை​யாளர் எஸ்ரா க்ளீன் குறிப்​பிட்​டுள்​ளார். இடைக்​காலத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஓசாஃப்​பைப் பாராட்​டிய ஒபா​மா, இரு​வருக்​குமே வழி​காட்டி​யான ஜான் லூயிஸிட​மிருந்து நல்ல மாற்​றத்​துக்​காகக் குரல் கொடுக்​கும் வழியை அவர் கற்​றுக்​கொண்​ட​தாகக் குறிப்​பிட்​டார்.

‘அடுத்த ஒபாமா’ என வர்ணிக்கப்படும் ஜான் ஓசாஃப்: அமெரிக்க அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் இளம் தலைவர்!
வங்கி முடக்கம் எதிரொலி: பராகுவே அதிபர் சான்டியாகோ பென்யா ராஜினாமா

X