ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 80 செ.மீ. உயரத்துக்கு சுனாமி தாக்கியது

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 80 செ.மீ. உயரத்துக்கு சுனாமி தாக்கியது
Updated on
1 min read

டோக்கியோ: வட ஜப்​பானில் நேற்று ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்​து, அங்​குள்ள ஒரு துறை​முகத்​தில் 80 சென்​டிமீட்​டர் உயரத்​துக்கு சுனாமி அலை தாக்​கியது.

உலகின் நில அதிர்வு அதி​கம் ஏற்​படும் நாடு​களில் ஒன்று ஜப்​பான். சுமார் 12.5 கோடி மக்​கள் வாழும் இந்​தத் தீவுக்​கூட்​டத்​தில், ஆண்​டு​தோறும் சுமார் 1,500 நில அதிர்​வு​கள் ஏற்​படு​கின்​றன. இந்​நிலை​யில், ஜப்​பானின் வடக்கு பகு​தி​யில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவு​கோலில் 7.4 அலகு​களாக பதி​வானது. இதையடுத்​து, கடற்​கரையோரப் பகு​தி​களுக்கு சுனாமி எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘நிலநடுக்​கம் காரண​மாக சுனாமி அலைகள் தாக்​கி, சேதம் ஏற்​படக்​கூடும். எனவே, பொது​மக்​கள் கடலோரப் பகு​தி​கள் மற்​றும் ஆற்​றங்​கரைப் பகு​தி​களில் இருந்து உடனடி​யாக வெளி​யேறி, உயர​மான இடங்​கள் அல்​லது பாது​காப்​பான கட்​டிடங்​களுக்​குச் செல்ல வேண்​டும். சுனாமி அலைகள் மீண்​டும் மீண்​டும் வரக்​கூடும் என்​ப​தால், எச்​சரிக்கை திரும்​பப் பெறப்​படும் வரை பாது​காப்​பான இடங்​களை விட்டு வெளி​யேற வேண்​டாம்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இவாட் மாகாணத்​தில் உள்ள குஜி துறை​முகத்​தில் நேற்று மாலை 5:34 மணிக்கு 80 சென்​டிமீட்​டர் (31 அங்​குலம்) உயரத்​துக்கு சுனாமி அலை தாக்​கிய​தாக ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. முன்​ன​தாக மாலை 5:32 மணிக்கு 70 சென்​டிமீட்​டர் உயர​முள்ள அலை தாக்​கிய​தாகத் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. தேசிய ஒளிபரப்பு நிறு​வன​மான என்​எச்கே வெளி​யிட்ட காட்​சிகளில், இவாட் துறை​முகங்​களைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் உடனடி சேதங்​கள் எது​வும் தென்​பட​வில்​லை.

பொது​மக்​களுக்கு உதவுவதற்​காக, பிரதமர் அலு​வல​கம் அவசரக்​கால மேலாண்​மைக் குழுவை அமைத்​துள்​ளது. பிரதமர் சானே டகா​யிச்சி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘எச்​சரிக்கை விடுக்​கப்​பட்ட பகு​தி​களில் வசிப்​பவர்​கள், தயவுசெய்து உயர​மான மற்​றும் பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேறுங்​கள்​. உயிர்​ச்​சேதம்​ அல்​லது சொத்​துசேதம்​ ஏதேனும்​ ஏற்​பட்​டுள்​ள​தாஎன்​ப​தை ஆய்​வு செய்​து வரு​கிறோம்​’’ என்​றார்​.

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 80 செ.மீ. உயரத்துக்கு சுனாமி தாக்கியது
திலக் வர்மா அதிரடி சதம்: குஜராத் அணியை 100 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in