அமைதிப் பேச்சுக்கு ஈரான் விதித்த நிபந்தனைகள் - அமெரிக்கா பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்

அமைதிப் பேச்சுக்கு ஈரான் விதித்த நிபந்தனைகள் - அமெரிக்கா பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்
Updated on
2 min read

தெஹ்ரான்: ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார் என ஈரான் கூறி இருந்த நிலையில், அது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து நேற்று ஈரான் தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியது.

அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்​க வேண்டுமானால், முதலில், ஈரான் மற்றும் லெப​னான் மீது போர் தொடுக்​கப்​ப​டாது என்பதற்கும், போர் முழு​மை​யாக நிறுத்​தப்படு​வதற்​கும் அமெரிக்கா முறை​யான உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும். இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி நிர்​வாகம் மற்​றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பின்​னரே, அணுசக்தி விவ​காரம் குறித்து ஈரான் விவா​திக்​கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரானின் இந்த நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஈரானின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “அவர்கள் சமர்ப்பிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்ததைவிட இது சிறப்பாகவே உள்ளது. எனினும், இந்த நிலைப்பாடு உண்மையானதா என்ற கேள்வி உள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் வல்லவர்கள். எனவே, எத்தகைய ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் அது அவர்கள் (ஈரான்) அணு ஆயுதத்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

3 கட்ட நிபந்தனைகள் என்னென்ன?

அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது. அவை:

1) ஈரான் மற்​றும் லெப​னான் மீது போர் தொடுக்​கப்​ப​டாது என்​ப​தற்​கும், போர் முழு​மை​யாக நிறுத்​தப்படு​வதற்​கும் அமெரிக்கா முறை​யான உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும்.

2) முதற்​கட்ட நிபந்தனை​கள் ஏற்​கப்​பட்​டால் மட்​டுமே, சர்வதேச கடல் வழிப் போக்​கு​வரத்​தில் முக்​கியப் பங்கு வகிக்​கும் ஹார்முஸ் ஜலசந்தி நிர்​வாகம் மற்​றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்​கப்​படும்.

3) மேற்​கண்ட இரு நிலைகளும் வெற்​றிகர​மாகக் கடந்த பின்​னரே, அணுசக்தி விவ​காரம் குறித்து ஈரான் விவாதிக்கும். ஈரானின் யுரேனி​யம் செறிவூட்​டலை நிறுத்த வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் நீண்​ட​கால கோரிக்கை இதில் அடங்​கும்.

ஈரானின் இந்த 3 கட்ட நிபந்தனைகள் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றிய வெள்ளை மாளிகை, “இவை மிக​வும் நுணுக்​க​மான ராஜதந்​திர விவகாரங்கள்” என்றது. இந்த நிலையில்தான், ஈரானின் நிபந்தனைகள் பரிசீலிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அமைதிப் பேச்சுக்கு ஈரான் விதித்த நிபந்தனைகள் - அமெரிக்கா பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்
“பயங்கரவாதத்துக்கு எதிராக ஷாங்காய் அமைப்பு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” - ராஜ்நாத் சிங்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in