மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி: என்டிஏ அரசின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on
2 min read

புதுடெல்லி: மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த மத்​திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

2014-ல் பிரதமர் பதவி​யேற்ற மோடி 12 ஆண்​டு​களை நிறைவு செய்துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்​தில் #12YearsOfGaribKalyan என்ற ஹேஷ்டேக்​குடன் இந்த மைல்​கல் சாதனையை பகிர்ந்​துள்​ளார்.

இதையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 12 ஆண்​டு​களில் இந்​தியா பல பெரிய மாற்​றங்​களைக் கண்​டுள்​ளது. அந்த மாற்​றங்​களின் மையப்​புள்​ளி​யாக ஏழைகள் மற்​றும் ஒடுக்கப்​பட்​டோரின் நலனே இருந்து வரு​கிறது. மக்​களின் வாழ்க்கைத் தரத்தை மேம்​படுத்த மத்​திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறது.

பல தசாப்​தங்​களாக நாட்​டின் வளர்ச்சி பலன்​களைப் பெறாமல் விளிம்பு நிலை​யில் இருந்த மக்​களுக்கு அனைத்து உதவி​களும் நேரடி​யாகக் கிடைப்​பதை இந்த அரசு உறுதி செய்​துள்​ளது. குறிப்பாக விவ​சா​யிகளுக்​கான பிஎம்​-கி​சான் திட்​டம், ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்​டம், இலவச மருத்துவக் காப்​பீடு, வீடமைப்​பு, குடிநீர், சுகா​தார பாது​காப்பு மற்றும் பெண்​கள் முன்​னேற்ற திட்​டங்​கள் மக்​களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்​தி​யுள்​ளன.

மாதந்​தோறும் 81 கோடிக்​கும் அதி​க​மான மக்​கள் இலவச உணவு தானி​யங்​களைப் பெற்று வரு​கின்​றனர். ‘பிரதம மந்​திரி ஆவாஸ் யோஜ​னா' திட்​டத்​தின் கீழ் 4 கோடிக்​கும் அதி​க​மான வீடு​கள் கட்டப்​பட்​டுள்​ளன. ‘ஜல் ஜீவன் மிஷன்' திட்​டத்​தின் கீழ் 10.5 கோடிக்கும் அதி​க​மான கிராமப்​புறக் குடும்​பங்​களுக்​குக் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

32 கோடிக்​கும் அதி​க​மான பெண்​கள் ‘ஜன் தன்' வங்​கிக் கணக்குகளைத் தொடங்​கி​யுள்​ளனர். சுமார் 3 கோடி பெண்​கள் ‘லட்சாதிபதி'களாக மாறி​யுள்​ளனர். அதேவேளை​யில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்​பறை​கள் கட்​டப்​பட்டு 91 லட்சத்துக்​கும் அதி​க​மான சுய உதவிக் குழுக்​கள் வலுப்படுத்தப்பட்​டுள்​ளன. சுமார் 2 கோடி இளைஞர்​கள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்​சி​யைப் பெற்று வரு​கின்​றனர். ‘முத்​ரா' கடன் திட்​டத்​தின் மூலம் 40 லட்​சம் கோடி ரூபாய்க்​கும் அதி​க​மான கடன் வழங்​கப்​பட்​டுள்​ளது. அரசு முன்​னெடுப்​பு​கள் மூலம் 10,000-க்​கும் மேற்​பட்ட புத்​தொழில்​கள் (ஸ்​டார்ட்​-அப்) அங்​கீகரிக்​கப்​பட்டு ஆதரிக்​கப்​பட்​டுள்​ளன.

சுகா​தா​ரத் துறையைப் பொறுத்​தவரை, 70 கோடிக்​கும் அதி​க​மான மக்​கள் சுகா​தா​ரக் காப்​பீட்​டுத் திட்​டங்​களின் கீழ் கொண்டு வரப்பட்​டுள்​ளனர். 60 கோடிக்​கும் அதி​க​மான மக்​கள் இலவசச் சிகிச்​சைக்​கான பலன்​களைப் பெற்று வரு​கின்​றனர். ‘ஜன் அவுஷதி' மையங்​கள் மூலம் சுமார் 19,000 மலிவு விலை மருந்துகள் கிடைக்​கின்​றன. மேலும், 90 சதவீதத்​துக்​கும் அதிகமான தடுப்​பூசிச் செயல்​பாடு எட்​டப்​பட்​டுள்​ளது.

“வளர்ந்த இந்​தி​யா” என்ற இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து முன்னேறும். மக்​களின் வாழ்க்​கை​யில் மேலும் முன்​னேற்​றத்தை ஏற்படுத்​தும் வகை​யில் நலத்​திட்​டங்​கள் மற்​றும் வளர்ச்​சித் திட்டங்கள் இடையறாது செயல்​படுத்​தப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி முதன்​முதலில் 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராகப் பதவி​யேற்​றார். தற்​போது, அவரது மூன்​றாவது பதவிக்​காலம் வெற்​றிகர​மாகத் தொடர்ந்​துள்​ளது. 12 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததைக் கொண்​டாடும் வகை​யில், பாஜக மற்​றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​டணி (என்டிஏ) கட்சிகள் இணைந்து ஒரு மாத கால நாடு தழு​விய பிர​சா​ரத்தை முன்​னெடுத்​துள்​ளன.

நேரு சாதனை முறியடிப்பு: மேலும், இந்​திய அரசி​யல் வரலாற்றில் மிக நீண்ட காலம் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு தொடர்ச்சியாகப் பத​வி​யில் இருக்​கும் பிரதமர் என்ற ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை இன்​று (ஜூன் 10) பிரதமர்​ நரேந்திர மோடி முறியடிக்​க உள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்தக்​கது.

<div class="paragraphs"><p><em>பிரதமர் மோடி</em></p></div>
இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்கள்: நடிகர் சரத்குமார் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in