

மோஜ்தபா காமேனி
புதுடெல்லி: ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாயின.
இது குறித்து ஈரான் உச்ச தலைவரின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் எலாஹி கூறியதாவது: ஈரானில் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் பணி இன்னும் நடைபெறுகிறது.
மோஜ்தாபா காமேனி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம். ஆனால் ஈரானின் புதிய உச்ச தலைவர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் எலாஹி கூறினார்.