எண்​ணெய் வயல்​கள், காஸ் நிலையங்​கள் மீது தாக்​குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்

எண்​ணெய் வயல்​கள், காஸ் நிலையங்​கள் மீது தாக்​குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்
Updated on
2 min read

வாஷிங்​டன்: கத்​தா​ரைத் தாக்​கி​னால் ஈரான் பேரழி​வைச் சந்​திக்​கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரித்​துள்​ளார். இதனால் போர் உச்ச கட்​டத்தை அடையும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து கடந்த பிப்​ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்​கின.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள வளை​குடா நாடு​கள் மீதும் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஒரு ராணுவ மோதலாக தொடங்​கிய இந்​தப் போர், தற்​போது முழு அளவி​லான எண்​ணெய் அழிப்பு போராக மாறி​யுள்​ளது. அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் மார்ச் 17 வரை ஈரானின் எரிசக்தி உற்​பத்தி மையங்​கள் மீது குறி வைப்​பதை தவிர்த்​தன.

ஈரானின் 90% எண்​ணெய் ஏற்​றுமதி மைய​மான கார்க் தீவை அமெரிக்கா தாக்​கிய போது கூட, ராணுவத் தளங்​கள் மட்​டுமே குறி வைக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில் ஈரானின் ‘தெற்கு பார்​ஸ்’ இயற்கை எரி​வாயு வயல் மீது இஸ்​ரேல் நேற்று முன்​தினம் இரவு தாக்​குதல் நடத்​தி​யது. ஈரான் இதற்கு பதிலடி​யாக சவுதி அரேபி​யா​வின் யான்பு துறை​க​முத்​தில் உள்ள அராம்கோ எண்​ணெய் நிறு​வனத்​தின் சாம்​ரெஃப் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீது நேற்று முன்​தினம் இரவு ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது.

மேலும் கத்​தார், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இயற்கை எரி​வாயு மையங்​கள் மற்​றும் குவைத்​தில் உள்ள 2 எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் மீதும் தாக்​குதல் நடத்​தி​யது. உலகின் மிகப்​பெரிய எரி​வாயு வயலான தெற்கு பார்​ஸ், இந்​தியா உட்பட உலகளா​விய திரவ இயற்கை எரி​வாயு (எல்​என்​ஜி) விநி​யோகத்​தின் முது​கெலும்​பாக உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​கள் நேரடி​யாகப் பாதிக்​கும்.

குறிப்பாக, எல்​என்​ஜி-க்​காக இந்​தியா பெரிதும் கத்​தாரை சார்ந்​துள்​ளது. இந்​தி​யா​வின் எல்​பிஜி-​யில் சுமார் 80-85% கத்​தார் மற்​றும் சவுதி அரேபி​யா​வில் இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த விநி​யோகத்​தில் நீண்ட கால பாதிப்பு ஏற்​பட்​டால் அது இந்​தி​யா​வில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் தடுத்​ததன் காரண​மாக, கச்சா எண்​ணெய் விநி​யோகம் ஏற்​கெனவே பாதிக்​கப்​பட்டு உலகம் போராடி வரும் நிலை​யில், கச்சா எண்​ணெய் உற்​பத்தி ஆலைகளுக்கு ஏற்​படும் எந்​தவொரு சேத​மும் பல ஆண்​டு​களுக்கு தாக்​கத்தை ஏற்​படுத்​தக் கூடும்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “ஈரானின் சவுத் பார்ஸ் எரி​வாயு மையத்​தின் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யிருக்​கிறது. இந்த தாக்​குதல் குறித்து அமெரிக்கா​வுக்கு எது​வும் தெரி​யாது. இஸ்​ரேலின் தாக்​குதலில் கத்​தார் நாட்​டுக்கு எந்த தொடர்​பும் கிடை​யாது. இது ஈரானுக்கு நன்​றாகவே தெரி​யும்.

ஆனால் இஸ்​ரேலின் சவுத் பார்ஸ் எரி​வாயு மையம் மீதான தாக்​குதலுக்கு பதிலடி​யாக கத்​தா​ரின் எல்​என்ஜி எரி​வாயு மையம் மீது ஈரான் மிகக் கடுமை​யான தாக்​குதலை நடத்​தி​யிருக்​கிறது. கத்​தார் எல்​என்ஜி மையம் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் ஈரான் பேரழி​வைச் சந்​திக்​கும்” என தெரி​வித்​துள்​ளார். இஸ்​ரேல்​ - ஈ​ரான்​ மோதல்​ உச்​ச கட்​டத்​தை எட்​டியுள்​ள​தால்​ உலக ​நாடுகள்​ அதிர்​ச்​சியில்​ உள்ளன.

எண்​ணெய் வயல்​கள், காஸ் நிலையங்​கள் மீது தாக்​குதல்: ஈரானின் பதிலடியும், ட்ரம்ப் கொந்தளிப்பும்
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in