ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குமாறு இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா: ஈரான் அமைச்சர் கிண்டல்

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி

Updated on
1 min read

டெஹ்ரான்: ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கக் கூடாது என மிரட்​டிய அமெரிக்​கா, இப்​போது வாங்​கிக் கொள்ள இந்​தி​யா​விடம் கெஞ்​சுகிறது என ஈரான் அமைச்​சர் கிண்​டலாக தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி எரிபொருள் தட்​டுப்​பாடு நில​வு​கிறது.

இந்​நிலை​யில், ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை நிறுத்​து​மாறு இந்​தியா உள்​ளிட்ட உலக நாடு​களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் கடந்த சில மாதங்​களாக மிரட்டி வந்​தது.

ஆனால் ஈரானுடன் கடந்த 2 வாரங்​களாக போரிட்டு வரும் அமெரிக்​கா, இப்​போது ரஷ்ய கச்சா எண்​ணெயை வாங்​கு​மாறு உலக நாடு​களை கெஞ்சி வரு​கிறது’’ என கூறி​யுள்​ளார்.

மேலும், ‘‘ஈரானுக்கு எதி​ரான சட்​ட​விரோதப் போரை ஆதரிப்​ப​தன் மூலம் ரஷ்​யா​வுக்கு எதி​ரான தங்​கள் செயல்​பாட்​டுக்கு அமெரிக்​கா​வின் ஆதர​வைப் பெறலாம் என்று ஐரோப்​பிய நாடு​கள் நினைப்​பது பரி​தாபத்​திற்​குரியது’’ என்​றும் அராக்சி பதி​விட்​டுள்​ளார்.

இந்​தியா தொடர்ந்து ரஷ்ய எண்​ணெய்யை வாங்​கு​வது தவிர்க்க முடி​யாதது என்று அமெரிக்க நிதி அமைச்​சர் ஸ்காட் பெசன்ட் விவரித்​துள்​ளார். மேற்கு ஆசிய போரால் ஏற்​பட்ட எரிசக்தி தட்​டுப்​பாடு​களுக்கு மத்​தி​யில், அவசரத் தேவை கரு​தியே இந்​திய சுத்​தி​கரிப்பு ஆலைகளுக்கு தற்​காலிக​மாக 30 நாள் விலக்கு அளிக்க முடிவு செய்​யப்​பட்​ட​தாக அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி</p></div>
எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 இந்திய சரக்குக் கப்பல்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in