அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதற்கு ஆதா​ர​மாக, போர் விமானங்​களின் உடைந்த பாகங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளன. ஆனால் இந்த தகவல்​கள் உறுதி செய்​யப்​பட​வில்​லை. அமெரிக்க ராணுவ​மும் விமானம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதை உறுதி செய்​ய​வில்​லை. அமெரிக்க போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​போது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்​பிய​தாகக் கூறப்​படு​கிறது.

அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஆனால் இது​வும் உறுதி செய்​யப்​பட​வில்​லை. அமெரிக்க விமானி பிடிபட்​டது தொடர்​பான புகைப்​படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்​லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்கா​வின் எப்​-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்​போது இரண்​டாவது எப்​-35 ரக போர் விமானத்​தை​யும் சுட்டு வீழ்த்​தி​யுள்​ளோம் என்று ஈரான் ராணுவ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்
உதயநிதி சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி: வேட்பு மனுவில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in