போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்
போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
Updated on
2 min read

டெஹ்ரான்: ஈ​ரானும், அமெரிக்கா​வும் போர் நிறுத்​தத்தை அறி​வித்​த​பின், லெபனான் மீது இஸ்​ரேல் நேற்று முன்தினம் 100 ஏவு​கணை​களை ஏவி 254 பேரை கொன்​றது. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியுள்​ளது. இதனால் சண்டை நிறுத்​தத்​தில் குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது.

போர் காரண​மாக மூடப்​பட்ட ஹார்​முஸ் ஜலசந்​தியை சர்வ​தேச கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்​கள் கிழமை முடிவடைந்​தது. ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதலை அமெரிக்கா தொடங்க இருந்த நிலை​யில் கடைசி நேரத்தில் 2 வார கால சண்டை நிறுத்த உடன்​பாடு ஏற்பட்டது. ஹார்​முஸ் ஜலசந்​தியை திறக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது. இரு நாடு​கள் இடையே அமைதி பேச்​சு​வார்த்தையை ஏற்​படுத்​தும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் இறங்​கியது.

இந்​நிலை​யில் இஸ்​ரேல் தனது தாக்​குதலை லெப​னான் நோக்கி திருப்​பியது. பெய்​ரூட் நகரில் ஹிஸ்​புல்லா தீவிரவா​தி​களை குறி​வைத்து நேற்று முன்​தினம் 100 ஏவுகணை​களை வீசி​யது. இதில் 254 பேர் உயி​ரிழந்​தனர். 890 பேர் காயம் அடைந்​தனர். லெப​னான் மீது கடும் தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தால், இஸ்​ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்​தி​யது.

இதைத் தொடர்ந்து ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டது. இதனால் வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியதாக கூறப்​படு​கிறது. இதனால் சண்டை நிறுத்​தம் குறித்து குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது.

ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்​தத்​துக்​கும், லெப​னான் மீதான தாக்​குதலுக்​கும் சம்​பந்​தம் இல்​லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்​பந்​த​மாக இருந்​தா​லும், அதில் லெபனானும் சேர்க்​கப்பட வேண்​டும் என ஈரான் வலியுறுத்தி​யது. இதனால் போரை தொடர்​வ​தா, அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு செல்​வதா அல்​லது இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகுவை கட்​டுப்​படுத்​து​வதா என்ற குழப்​பத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்​ளார்.

பாக். சிறப்​புக்​குழு

ஈரான் போர் காரண​மாக நாட்​டின் பொருளா​தா​ரம் மற்​றும் பாது​காப்​பில் ஏற்​படும் நெருக்​கடியை சமாளிக்க தேசிய ஒருங்​கிணைப்பு மற்​றும் மேலாண்மை கவுன்​சில் (என்​சிஎம்​சி) என்ற சிறப்​புக் குழுவை பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்​துள்​ளார். இதற்கு பாக். பொருளாதா​ரத்​துறை அமைச்​சர் அகத் கான் சீமா, லெப்டினன்ட் ஜெனரல் ஜாபர் இக்​பால் ஆகியோர் தலைமை தாங்​கு​வர்.

பாகிஸ்​தான் அரசின் அனைத்து துறை பிர​தி​நி​தி​கள் இதில் உறுப்​பினர்​களாக இருப்​பர். சண்டை நிறுத்​தம் தோல்வியடைந்து மீண்​டும் ஈரான் போர் நடை​பெற்​றால் அதனால் நாட்​டின் பொருளா​தா​ரம் மற்​றும் பாது​காப்​பில் ஏற்​படும் பாதிப்​பு​கள், அகதி​கள் பிரச்​சினை குறித்து இந்த சிறப்பு குழு ஆரா​யும்.

ஆலோ​சனை

ஈரான் போரில் ஹார்​முஸ் ஜலசந்​தியை திறக்க நேட்டோ நாடு​கள் உதவாத​தால், நேட்டோ அமைப்​பில் இருந்து அமெரிக்கா வில​கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில் நேட்டோ தலைமை செயலாளர் மார்க்​ரூட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் சந்​தித்​தார். அப்​போது ஈரான் போர், ரஷ்யா - உக்​ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரு​வது, நேட்டோ நாடு​களின் ஒத்​துழைப்​பை அதி​கரிப்​பது குறித்​து இருவரும்​ பேசி​ய​தாக வெள்​ளை மாளி​கை செய​லா​ளர்​ கரோலின்​ லீ​விட்​ தெரிவித்தார்.

இன்று பேச்​சு​வார்த்தை

ஈரான் - அமெரிக்கா இடையே இஸ்​லாமா​பாத்​தில் இன்று அமைதி பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு நேற்று பாகிஸ்​தான் வந்​தது. இதே​போல் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தனது குழு​வினருடன் பாகிஸ்​தான் வந்து இன்று பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​ப​தாக தகவல் வெளியாகியுள்​ளது.

இதில் நீண்​ட​கால சண்டை நிறுத்​தம் மற்​றும் அமைதி ஒப்​பந்​தம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும் என கூறப்படு​கிறது. இதில் அமெரிக்க படைகளை மேற்கு ஆசியா பகு​தி​களில் இருந்து வாபஸ் பெற வேண்​டும், தடைகளை நீக்க வேண்​டும், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் டோல் வரி வசூலிக்​கும் அதி​காரம் தேவை போன்ற கோரிக்​கைகளை ஈரான் விடுக்​கும் என கூறப்​படு​கிறது. ஆனால் இந்த பேச்​சு​வார்த்​தை​யில் இஸ்​ரேல் குழு பங்​கேற்​ப​தற்கான வாய்ப்​பு​கள் குறைவு என பாகிஸ்​தான் கூறியுள்ளது.

தயார் நிலையில் அமெரிக்கப்படை

சண்டை நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: ஈரான் - அமெரிக்கா இடையே முழுமையான ஒப்பந்தம் ஏற்படும் வரை அனைத்து அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் ஆயுதங்களுடன் ஈரானை சுற்றி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பர்.

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், ஈரான் மீதான தாக்குதல் யாரும் இதுவரை பார்க்காத வகையில் மிக வலுவானதாக இருக்கும். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.

போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in