இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு

உயி​ரிழந்​த ஐஆர்​ஜிசி தளப​தி​ முகமது பாக்​பூர்

உயி​ரிழந்​த ஐஆர்​ஜிசி தளப​தி​ முகமது பாக்​பூர்

Updated on
1 min read

டெல் அவிவ்: ஈரான் ராணுவத்​தின் சக்​தி​வாய்ந்த படைப்​பிரி​வாக இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) செயல்​படு​கிறது. இந்த படைப் பிரி​வின் முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று மிகப்​பெரிய அளவில் வான்​வழி தாக்குதல்களை நடத்​தின.

இதில் ஈரானின் சக்தி வாய்ந்​தவர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவரும் ஐஆர்​ஜிசி தளப​தி​யு​மான முகமது பாக்​பூர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக இஸ்ரேல் செய்தி நிறு​வன​மான என்12 தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஈரான் இதை உறு​திப்​படுத்​த​வில்​லை.

கடந்த ஆண்டு இஸ்​ரேல், ஈரான் இடையே நடந்த சண்​டை​யில் ஐஆர்​ஜிசி தளபதி ஹுசைன் சலாமி கொல்​லப்​பட்​டார். இதையடுத்​து, ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி, முகமது பாக்​பூருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்​கியதுடன் ஐஆர்​ஜிசி தளப​தி​யாக​வும் நியமித்​தார். இவர் பொறுப்பேற்றதும் இஸ்​ரேல், அமெரிக்கா​வுக்கு கடந்த மாதம் ஈரான் எச்​சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>உயி​ரிழந்​த ஐஆர்​ஜிசி தளப​தி​ முகமது பாக்​பூர்</p></div>
குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in