“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் துடித்துக்கொண்டிருக்கிறது” - ட்ரம்ப்

“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் துடித்துக்கொண்டிருக்கிறது” - ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன் டி.சி.: தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "போர்நிறுத்தத்தை மீறுவதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், “போரை மீண்டும் தொடங்க வேண்டிய தேவை நமக்கு இருப்பதாக நான் கருதவில்லை. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரான் பாதுகாப்புப் படைகளின் திறன்களை கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன. அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது.

அவர்களின் ஆளில்லா விமான (drone) தொழிற்சாலைகளின் செயல்பாடு சுமார் 82 சதவீதம் குறைந்துவிட்டது. அவர்களின் ஏவுகணை உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஏவுகணைத் தொழிற்சாலைகள் ஏறக்குறைய 90 சதவீதம் முடங்கிவிட்டன. அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம்.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் காரணமாக, ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. எண்ணெய் விற்பனை மூலம் அவர்களுக்கு எந்த வருவாயும் கிடைப்பதில்லை. இந்தச் சிக்கலுக்கு மிக விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் தீவிரமாக விரும்புகிறது. இது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் என்ன என்பது எனக்குத் தவிர, வேறு ஓரிரு நபர்களுக்கு மட்டுமே தெரியும்; மற்ற யாருக்கும் தெரியாது” என தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் துடித்துக்கொண்டிருக்கிறது” - ட்ரம்ப்
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித்து விளையாட்டுகளே”: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in