அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியது எப்படி?

உலக நாடுகள் அதிர்ச்சியும் பின்னணியும்
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியது எப்படி?
Updated on
1 min read

வாஷிங்டன்/டெஹ்ரான்: அதி நவீன தொழில்​நுட்​பம் கொண்​டதும் ரேடார்​களில் சிக்​காதது​மான அமெரிக்​கா​வின் ‘எப்​-35' ரக போர் விமானத்தை ஈரான் கண்​டு​பிடித்து தாக்​கி​யிருப்​பது உலக நாடு​களை திகைப்​பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்​பாக, ஈரானின் வான் பாது​காப்பு அரண்​கள் சிதைக்​கப்​பட்​டு​விட்​ட​தாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரி​வித்து வந்த நிலை​யில் இச்​சம்​பவம் நடந்துள்ளது.

அமெரிக்​கா​வின் விலை​யுயர்ந்த மற்​றும் அசைக்க முடியாதது எனக் கருதப்​படும் எப்​-35 விமானம், தனது வரலாற்​றிலேயே இது​வரை போர்க்​களத்​தில் தாக்கப்பட்டதில்​லை. ஆனால், நேற்று முன்​தினம் ( மார்ச் 19) ஈரான் வான் எல்​லைக்​குள் பறந்த அந்த விமானத்தை ஈரானிய பாது​காப்​புப் படை குறி​வைத்​துத் தாக்​கியது.

ஈரான் எல்​லை​யில் உள்ள பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் மற்றொரு எப்​-35 விமான​மும் தாக்​கப்​பட்​ட​தாகத் தகவல்கள் தெரிவிக்​கின்​றன. தாக்​கப்​பட்ட விமானம் விபத்​துக்​குள்​ளான​தாக ஈரான் கூறி​னாலும், அது மத்​திய கிழக்கு பகு​தி​யில் உள்ள ஒரு தளத்​தில் அவசர​மாகத் தரையிறக்​கப்​பட்​ட​தாக அமெரிக்கா தெரி​வித்​துள்​ளது.

அதிர்ச்​சி​யில் அமெரிக்கா “நாங்​கள் விரும்​பும் இடத்​தில் பறக்​கிறோம், எங்​களை யாரும் சுட முடி​யாது’’ என்று அதிபர் டிரம்ப் கடந்த வியாழக்​கிழமை பெரு​மிதம் தெரிவித்​திருந்​தார். ஈரானின் வான் பாது​காப்பு முழுமையாக அழிக்​கப்​பட்​டு​விட்​ட​தாக அவர் கூறிய சில மணி நேரங்​களி​லேயே எப்​-35 விமானம் தாக்​குதலுக்கு ஆளாகி​யுள்​ளது. சுமார் 100 மில்​லியன் டாலர் மதிப்​புள்ள இந்த விமானத்தை இடைமறிக்​கும் காட்​சிகளை வீடியோவாக வெளி​யிட்டு அமெரிக்​கா​விற்கு ஈரான் அதிர்ச்சி கொடுத்​துள்​ளது.

எஃப்​-35 விமானத்தை தாக்​கியது எப்​படி?

ரேடார்​களில் சிக்​காத ‘ஸ்​டெல்த்' தொழில்​நுட்​பம் கொண்ட இந்த எப்​-35 விமானத்தை ஈரான் எப்​படித் தாக்கியது என்​பது குறித்து பாது​காப்​புத் துறை நிபுணர் சந்தீப் உன்​னிதன் கூறும்​போது, “ஸ்டெல்த் தொழில்​நுட்​பம் என்​பது ரேடார்​களால் மட்​டுமே கண்​டு​பிடிக்க முடி​யாதது. ஆனால் இத்​தகைய விமானங்​கள் வெளி​யிடும் வெப்​பத்தை உணரும் திறன்​வாய்ந்த ‘இன்ஃப்​ராரெட்' தொழில்நுட்​பம் மூலம் இதைத் கண்​டறிய முடி​யும்.

எஃப்​-35 விமானம் ஒற்றை எஞ்​சின் கொண்​டது என்​ப​தால், அது அதி​கப்​படி​யான வெப்​பத்தை வெளி​யிடு​கிறது. ஈரானின் ‘358' ரக ஏவு​கணை​கள் அல்​லது இன்ஃப்​ராரெட் தேடல் மற்​றும் கண்​காணிப்பு முறை மூலம் அதன் வெப்பத்தை அடை​யாளம் கண்டு அமெரிக்​கா​வின் எப்​-35 விமானத்தை ஈரான் தாக்​கி​யிருக்​கலாம்’’ என்​றார்.

உலகளா​விய தாக்​கம்

இந்​தச் சம்​பவம் உலகளா​விய பாது​காப்பு உத்​தி​களில் பெரும் மாற்​றத்தை ஏற்​படுத்​தும் எனக் கருதப்​படு​கிறது. இந்​தியா உள்​ளிட்ட சுமார் 15 நாடு​கள் எப்​-35 விமானங்​களை வாங்க ஆர்​வம் காட்டி வரும் நிலை​யில், அதன் பலவீனம் தற்​போது வெளிச்​சத்​திற்கு வந்​துள்​ளது.

உலகிலேயே அதிக தடைகளைச் சந்​தித்​துள்ள ஈரான், மேக் 1.6 வேகத்​தில் ராடார்​களில் சிக்​காமல் பறக்​கும் சக்​தி​வாய்ந்த அமெரிக்​கா​வின் அதிநவீன போர் வி​மானத்தை கண்​டு​பிடித்து தாக்​கி​யிருப்​பது உலக அரசி​யலில் ஒரு புதி​ய மாற்​றத்​தின்​ தொடக்​கம்​ என்​று புவி​சார்​ அரசி​யல்​ நிபுணர்​கள்​ கருதுகின்​றனர்​.

அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியது எப்படி?
உச்ச கட்டத்தில் ஈரான் போர்... நடப்பது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in