பஹ்ரைன் விமான தளம் மீது ஈரான் தாக்குதல்

பஹ்ரைன் விமான தளம் மீது ஈரான் தாக்குதல்
Updated on: 
1 min read

துபாய்: பல வார அமைதிக்​குப் பிறகு பஹ்ரைனில் உள்ள விமானப்​படைத் தளம் மீது ஈரான் நேரடித் தாக்​குதல் நடத்தியுள்ளது.

பஹ்ரைனின் ரிஃபா ஹெலிகாப்​டர் தளத்​தைக் குறிவைத்து ஆறு ட்​ரோன்​களை ஏவிய​தாக ஈரானின் இஸ்லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) நேற்று அறி​வித்​தது. அமெரிக்க ராணுவத்​தின் ஆக்​கிரமிப்​புக்​குப் பதிலடி​யாகவே இந்​தத் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தாக்​குதல் வெற்​றிகர​மாக இலக்​கைத் தாக்​கிய​தாக ஈரான் கூறியுள்ள போதிலும், ஈரானின் ட்​ரோன்​களை இடைமறித்து அழித்​து​விட்​ட​தாக பஹ்​ரைன் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

செப்​டம்​பர் தொடக்​கத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ட்​ரோன் தாக்​குதல் நடத்​தி​ய பிறகு, பஹ்​ரைன் மீது நடத்​தப்​படும் முதல் நேரடித் தாக்​குதல் இது. ஈரான் மீதான தாக்​குதலை நிறுத்தி வைப்​பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்​ரம்ப் தெரி​வித்​திருந்த நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்து தொடர்​பான பதற்​றம் தொடர்ந்து நீடித்தே வரு​கிறது.

அமெரிக்கா-ஈரான் இடை​யி​லான மோதல் ஒன்​ப​தாவது மாதத்தை எட்​டியுள்ள நிலை​யில் இதனை முடிவுக்​குக் கொண்டுவருவதற்கான பாதை திறந்தே இருப்​ப​தாக ஈரான் நாடாளு​மன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் நேற்று தெரிவித்​தார். அமெரிக்​கா​வுடனான பேச்சு​வார்த்​தையில் ஈரானின் நியாய​மான நிபந்​தனைகளை அமெரிக்கா ஏற்​றுக்​கொண்​டால் சுமுகத் தீர்வு எட்​டப்​படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் விமான தளம் மீது ஈரான் தாக்குதல்
மதுரை நகைக்கடையில் கொள்ளை அடித்த தனி ஒருவனின் பின்புலக் கதை!

X