அமெரிக்காவில் மிகப்பெரிய இந்திய எஃகு ஆலை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த எஸ்ஸார் குழும இணை நிறுவனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த எஸ்ஸார் குழும இணை நிறுவனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா.

Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் எஸ்​ஸார் குழு​மம் அமெரிக்​கா​வின் அயோவா மாகாணத்​தில் மிகப்​பெரிய எஃகு ஆலையை அமைக்​கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு எஸ்​ஸார் குழு​மம் செயல்​படு​கிறது. இரும்​பு, கச்சா எண்​ணெய், எரி​வா​யு் என பல்​வேறு தொழில்​களை நடத்தி வரு​கிறது. பிரிட்​டன், சவுதி அரேபி​யா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடு​களில் எஸ்​ஸார் குழு​ம கிளை​கள் உள்​ளன.

இ்க்குழு​மத்​தின் சார்​பில் கடந்த 2007-ம் ஆண்​டில் அமெரிக்​கா​வின் நஷ்​வாக் நகரில் மெசாபி மெட்​டா​லிக்ஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது. அங்கு சுமார் 16,000 ஏக்​கர் பரப்​பில் இரும்பு தாது சுரங்​கத்தை மெசாபி நிறு​வனம் நடத்தி வரு​கிறது. இதைத் தொடர்ந்து மெசாபி சார்​பில் அயோவா மாகாணம், லீ பகு​தி​யில் ரூ.1.5 லட்​சம் கோடி முதலீட்​டில் புதி​தாக எஃகு ஆலை அமைக்​கப்பட உள்​ளது.

இதுகுறித்து வெள்ளை மாளி​கை​யில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை எஸ்​ஸார் குழும இணை நிறு​வனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா நேற்று சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “கடந்த ஆண்டு எஃகு பொருட்​கள் இறக்​கும​திக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இதன்​ காரண​மாக பல்​வேறு நிறு​வனங்​கள் நேரடி​யாக அமெரிக்​கா​வில் ஆலைகளை தொடங்​கு​கின்​றன. தற்​போது எஸ்​ஸார் குழு​மம் சார்​பில் அமெரிக்​கா​வில் அயோ​வா​வில் மிகப்​பெரிய எஃகு ஆலை தொடங்​கப்​படு​கிறது. இதன்மூலம் இந்த துறை உற்​பத்​தி​யில் அமெரிக்கா மேலும் வலு​வடை​யும்” என்று தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த எஸ்ஸார் குழும இணை நிறுவனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா.</p></div>
இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்: துப்பாக்கிச் சுடுதலில் நீரு தண்டா, தொடர் ஓட்டத்தில் கோவை வித்யா அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in