ஹார்முஸ் ஜலசந்தியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் பைலட்டுகளை மீட்ட ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்

ஹார்முஸ் ஜலசந்தியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் பைலட்டுகளை மீட்ட ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்
Updated on
1 min read

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி​யில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ஹெலி​காப்​டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்​தி​ய​போது, அதில் இருந்த 2 பைலட்​டு​கள் கடலில் குதித்தனர். அவர்​களை மீட்க அனுப்​பப்​பட்ட ட்ரோன் படகின் தயாரிப்​பில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த வைபவ் முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார்.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டரை ஈரான் ராணுவம் கடந்த திங்​கள் கிழமை சுட்டு வீழ்த்​தி​யது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கடலில் குதித்​தனர்.

இவர்​களை அமெரிக்க கடற்​படை​யில் உள்ள கார்​சேர் என்ற ட்ரோன் படகு 2 மணி நேரத்​தில் உயிருடன் மீட்​டது. 24 அடி நீளமுள்ள இந்த படகு ரிமோட் கன்ட்​ரோல் மூலம் 35 நாட்டிக்கல் மைல் வேகத்​தில் 1,000 நாட்​டிக்​கல் மைல் தூரம் பயணிக்​கும் திறன் படைத்​தது. இது 1,000 பவுண்ட் எடையை சுமந்து செல்​லும்.

இந்த ட்ரோன் படகை அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் உள்ள சரோனிக் டெக்​னாலஜிஸ் என்ற நிறு​வனம் உரு​வாக்​கியது. இதன் பங்​கு​தா​ரர்​களில் ஒரு​வர் வைபவ் அல்​டேகர். இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த இவர் இந்​நிறு​வனத்​தின் தலைமை தொழில்நுட்ப அதி​காரி.

கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் எலக்ட்​ரிக்​கல் இன்ஜினியரிங் படித்த இவர், செயற்கை நுண்​ணறிவு தொழில்நுட்பத்​தில் இயங்​கும் இந்த ட்ரோன் படகை உருவாக்கினார். இவர் ஆஸ்​திரேலிய கடற்​படைக்​காக தயாரிக்​கப்​பட்ட ட்ரோன் நீர்​மூழ்​கி​யிலும் முக்​கிய பங்​காற்​றிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் பைலட்டுகளை மீட்ட ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்
நேருவின் சாதனை முறியடிப்பு - மோடிக்கு குடியரசு தலைவர், துணை தலைவர் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in