ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்
Updated on
2 min read

அங்காரா: ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்த நாட்​டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ‘‘ஈரானுட​னான போர் நிறுத்த ஒப்​பந்​தம் முறிந்​து​விட்​டது. ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது வீணானது’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்​பந்​தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன. இரு தரப்பு போர் நிறுத்​தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் அமைதி ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்​தப்​படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்​பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை நேற்று முன்​தினம் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தினர்.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் துறை​முக நகரங்​கள் பந்​தர் அப்​பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்​களில் அமெரிக்கா நேற்று முன்​தினம் குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் வான் பாது​காப்​புக் கருவி​கள், ரேடார் மையங்​கள், ஏவு​கணை தளங்​கள், 60-க்​கும் மேற்​பட்ட கடற்​படை படகு​கள் அழிக்​கப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவ கட்​டுப்​பாட்டு மையம் சென்ட்​காம் தெரி​வித்​தது.

அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் இதர வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், நேட்டோ உச்சி மாநாட்​டில் பங்​கேற்க துருக்கி நாட்​டின் அங்​கா​ரா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்​துள்​ளார். அப்​போது அவரிடம் செய்​தி​யாளர் ஒரு​வர், “ஈரானுட​னான போர் நிறுத்​தம் முடிந்​து​விட்​ட​தா? அமை​திக்​கான 14 அம்ச ஒப்​பந்​தம் வீண்​தானா என்று கேள்வி எழுப்​பி​னார்.

அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: என்​னைப் பொறுத்த வரை, ஈரானுடன் சண்டை நிறுத்தம் முடிந்​து​விட்​ட​தாக நினைக்​கிறேன். ஈரான் தலைவர்​கள் மனநோ​யாளி​கள், தீய​வர்​கள், வன்முறை​யாளர்​கள். அவர்களிடம் ஏதோ தவறு உள்ளது. ஈரான் தலை​வர்​களு​டன் பேச்சுவார்த்தை நடத்​துபவர்கள் தொடர்ந்து நடத்​தட்​டும். ஆனால், அவர்​கள் நேரத்தை வீணடிக்​கிறார்​கள்.

கமேனி​யின் ஈமச்​சடங்கை நடத்​து​வதற்​குப் பதிலாக, எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்த தொடங்​கினர். அதனால் நேற்று முன்​தினம் நாங்​கள் ஈரானை கடுமை​யாகத் தாக்​கினோம். மீண்டும் கடுமையாகத் தாக்க திட்டமிட்டுள்ளோம். கார்க் தீவை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளோம். ஹார்முஸ் ஜல சந்தியை நாங்கள் மீண்டும் முற்றுகையிடலாம். அங்கு கண்ணிவெடிகளை அகற்ற நேட்டோ நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்புகின்றன. இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் கூறி​னார்.

அமெரிக்​கா​வின் தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் சிலர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​களது இறு​திச் சடங்கு நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், போர் நிறுத்த ஒப்​பந்​தத்தை மீறி ஈரானும், அமெரிக்கா​வும் பரஸ்​பரம் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால் வளை​குடா நாடு​கள் பதற்​றத்​தில் உள்​ளன. மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி மீண்​டும் சிக்​கலுக்கு உள்​ளாகி உள்​ளது. இதனால் மீண்​டும் எரிபொருள் விலை அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், இந்​தியப் பங்​குச் சந்​தைகள் நேற்​றைய வர்த்​தகத்​தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மும்பை பங்​குச் ​சந்தை குறி​யீட்டு எண் ‘சென்​செக்​ஸ்’ மற்​றும் தேசிய பங்​குச் ​சந்தை குறி​யீட்டு எண் ‘நிஃப்​டி” ஆகிய இரண்​டும் தலா 2 சதவீதம் வரை சரிந்து முதலீட்​டாளர்​களுக்​குப் பெரும் அதிர்ச்​சியை அளித்​தன. வர்த்​தகத்​தின் பிற்​பா​தி​யில் விற்​பனை அழுத்​தம் மிகத் தீவிரமடைந்​தது. இதையடுத்​து, நேற்று ஒரே நாளில் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள நிறு​வனங்​களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சரிந்​து, முதலீட்​டாளர்​களுக்கு ரூ.8 லட்​சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது. பிஎஸ்​இ-ல் பட்டியலிடப்​பட்ட நிறு​வனங்​களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.471 லட்​சம் கோடி​யாகக் குறைந்​தது.

குறிப்​பாக, நிஃப்டி பேங்க், எஃப்​எம்​சிஜி மற்​றும் ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறை சார்ந்த குறி​யீடு​கள் 2 சதவீதத்​துக்​கும் மேல் வீழ்ச்​சி​யடைந்​தன. இதுகுறித்து சந்தை ஆய்​வாளர்​கள் கூறிய​தாவது:

ஈரான் உடனான தற்​காலிக அமைதி உடன்​படிக்கை முற்​றி​லும் முடிவுக்கு வந்​து​விட்​ட​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இது முதலீட்​டாளர்​களின் நம்​பிக்​கையைக் கடுமை​யாகப் பாதித்​தது.

இதனால் சர்​வ​தேச சந்​தை​யில் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரே நாளில் சுமார் 5 சதவீதம் உயர்ந்​து, ஒரு பேரல் 78.09 டால​ராக அதி​கரித்​தது. இது இந்​தி​யா​வின் பணவீக்க அச்​சத்தை தூண்​டி​யுள்​ளது. இந்​தியச் சந்​தைகள் மட்​டுமல்​லாது, உலகெங்​கிலும் உள்ள பங்​குச் ​சந்​தைகள் சரிவைச் சந்​தித்​தன. இவ்​வாறு சந்​தை ஆய்​வாளர்​கள்​ தெரிவித்​தனர்.

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி நஷ்டம்
ஐசிசியின் ‘Hall of Fame’ பட்டியலில் சவுரவ் கங்குலி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in