ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்

ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஓமன் கடற்​கரை அருகே இந்​தி​யக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல் ஒன்று தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளது.

இது குறித்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஓமன் கடற்​கரை அருகே இந்தியக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல் மீது புதன்​கிழமை அன்று தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. தாக்​குதல் நடத்​தி​யது யார் என்​பது உடனடி​யாகத் தெரிய​வில்​லை. இந்​தத் தாக்​குதல் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. வணி​கக் கப்​பல்​கள் மற்​றும் மாலுமிகள் தொடர்ந்து இலக்கு வைக்​கப்​படு​வதை நாங்​கள் வன்​மை​யாகக் கண்டிக்கிறோம்.

அதே​நேரம் அந்​தக் கப்​பலில் இருந்த அனைத்து இந்​திய ஊழியர்களும் பாது​காப்​பாக உள்​ளனர். அவர்​களை மீட்ட ஓமன் அதி​காரி​களுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோம். வணிகக் கப்​பல்​களை இலக்கு வைப்​பது, அப்​பாவி ஊழியர்​களின் உயிருக்கு ஆபத்தை விளை​விப்​பது அல்​லது கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் வணி​கச் சுதந்​திரத்​தைத் தடுப்​பது போன்ற செயல்​கள் தவிர்க்​கப்பட வேண்​டும் என்று இந்​தியா மீண்​டும் வலியுறுத்துகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in