ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஈ​ரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்​தார்.

இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்​தி​யத் தூதரகத்தை தொடர்​பு​கொண்​டு, அவர்​கள் பரிந்​துரைக்​கும் வழித்​தடங்​களை பயன்​படுத்தி ஈரானிலிருந்து வெளி​யேற வேண்​டும். இதன்​மூலம் அவர்கள் பாது​காப்​பாக வெளி​யேற முடி​யும்.

அதே​நேரத்​தில் தூதரக அதி​காரி​களை கலந்து ஆலோசிக்காமல் சர்​வ​தேச தரை வழி எல்​லையை கடந்து செல்​லும் முயற்​சி​யில் இந்​தி​யர்​கள் ஈடுபட வேண்​டாம். இவ்​வாறு இந்​தி​யத் தூதரகம் அறி​விப்​பில் கூறி​யுள்​ளது.

போர் நிறுத்த அறி​விப்​புக்கு முன்​ன​தாக ஈரானிலிருந்து இது​வரை 1,700-க்​கும் மேற்​பட்ட இந்​திய குடிமக்​கள் நில எல்லைகள் வழி​யாக அண்டை நாடு​களுக்​குச் சென்றுள்ளனர். அங்​கிருந்து அவர்​கள் இந்​தியா திரும்​புவதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்றன என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் சார்​பில் கடந்த வாரம் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in