15 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்திய டிரைவருக்கு ஷார்ஜாவில் ரூ.10 கோடி பரிசு

தனது குடும்பத்தினருடன் ஓட்டுநர் விபீஸ் பள்​ளி​யாளி

தனது குடும்பத்தினருடன் ஓட்டுநர் விபீஸ் பள்​ளி​யாளி

Updated on
1 min read

ஷார்ஜா: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் ஷார்ஜா நகரில் கடந்த 15 ஆண்​டு​களாக லாட்​டரி டிக்​கெட் வாங்​கு​வதை வழக்​க​மாக கொண்ட இந்​திய டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்​துள்​ளது.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் ஷார்ஜா நகரில் பணி​யாற்​றும் இந்​திய டிரைவர் விபீஸ் பள்​ளி​யாளி. இவர் மாதந்​தோறும் லாட்​டரி சீட்டு வாங்​கு​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். கடந்த 15 ஆண்​டு​களாக லாட்​டரி சீட்டு வாங்​கும் இவருக்கு ஒரு முறை கூட பரிசு கிடைத்​த​தில்​லை. இதற்​காக மனை​வி​யிடம் திட்டு வாங்​கு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டுள்​ளார். கடந்த மாதம் கூட 1,000 திர்​கா​முக்கு லாட்​டரி சீட்டு வாங்​கி​னார்.

இந்​நிலை​யில், கூட்​டாக சேர்ந்து லாட்​டரி சீட்டு வாங்க உறவினரும் அவருடைய இரு நண்​பர்​களும் விபீஸ்​-க்கு அழைப்பு விடுத்​தனர். அப்​போது அவர்​களிடம் நான் ஏற்​கெனவே 1,000 திர்​கா​முக்கு லாட்​டரி சீட்​டு​கள் வாங்​கி​யுள்​ள​தாக கூறி​யுள்​ளார். அவர்​களின் வற்​புறுத்​தல் காரண​மாக, 15 மில்​லியன் திர்​காம் பரிசுத் தொகை​யுள்ள லாட்​டரி சீட்டை கூட்​டாக வாங்​கினார்.

இந்​நிலை​யில், லாட்​டரி சீட்டு நிறு​வனத்​திடம் இருந்து போன் வந்​துள்​ளது. வழக்​கம் போல் லாட்​டரி சீட்டு வாங்​கு​வதற்​காக அழைப்​பார்​கள் என விபீஸ் நினைத்​தார். ஆனால், அவர் கூட்​டாக வாங்​கிய லாட்​டரிக்கு 25 மில்​லியன் திர்​காம் பரிசு விழுந்​துள்​ள​தாக தெரி​வித்​தனர். இத்​தகவலை முதலில் நம்ப மறுத்த விபீஸ் தனது மனை​வி​யிடம் தகவல் தெரி​வித்து ஆன்​லைனில் சரி​பார்க்​கச் சொன்​னார். லாட்​டரி சீட்டு பரிசு பெற்​றவர் பட்​டியலில் விபீஸ் பள்​ளி​யாளி பெயர் இருப்​பதை அவர் உறுதி செய்​தார்.

நான்கு பேர் கூட்​டாக சேர்ந்து அந்த லாட்​டரியை வாங்​கிய​தால், விபீஸ் பள்​ளிக்கு அவரது பங்​காக 4 மில்​லியன் திர்​ஹாம் (ரூ.10 கோடி) கிடைக்​கும். இந்த பரிசுத் தொகை​யுடன் விபீஸ் இந்​தியா திரும்பி பெங்​களூரு​வில் படிக்​கும் தனது மகள் வந்​தனா பெயரில் சொத்​துகள்​ வாங்​க முடிவு செய்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>தனது குடும்பத்தினருடன் ஓட்டுநர் விபீஸ் பள்​ளி​யாளி</p></div>
பத்திரிகையாளர் கொலையில் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in