‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து

ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்

ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்

Updated on
1 min read

மாஸ்கோ: “உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா இனி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்காது என அமெரிக்க தரப்பு தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை அன்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

“இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை ரஷ்யா மட்டுமே தனியொரு தேசமாக விநியோகிக்கவில்லை. இதை ரஷ்யா உட்பட உலக அளவில் எண்ணெய் வளம் மிக்க சர்வதேச நாடுகள் நன்கு அறியும்.

ஏனெனில் இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதனால் இதில் புதிது எதுவும் இல்லை என நாங்கள் பார்க்கிறோம். உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா திட்டவட்டம்: இந்​தி​யப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரி 18 சதவீத​மாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இந்​நிலை​யில், வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

இந்​தி​யா, அமெரிக்கா இடையே​யான வர்த்​தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்​ளது. இதை ஒரு மிகப்​பெரிய வெற்​றி​யாக அமெரிக்கா பார்க்​கிறது. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை வாங்​கு​வ​தில்லை என இந்​தியா உறுதி அளித்​துள்​ளது.

மேலும், அமெரிக்​கா, வெனிசுலா நாடு​களிட​மிருந்து இனி கச்சா எண்​ணெயை இந்​தியா வாங்​கும். ரஷ்​யா​விட​மிருந்து வாங்​கப்​படும் கச்சா எண்​ணெயை நிறுத்​து​வதோடு மட்​டுமல்​லாமல் அமெரிக்க பொருட்​களை இறக்​குமதி செய்​யும் எண்​ணிக்​கையை அதி​கரிக்​க​வும் இந்த ஒப்​பந்​தம் வகை செய்​கிறது.

வெனிசுலா​விட​மிருந்​தும் இந்​தி​யா, கச்சா எண்​ணெயை வாங்க முடி​யும். இதனால் அமெரிக்க பொருளா​தா​ரம் மேலும் பலன் அடை​யும். இந்​தி​யா​வுடன் மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை அதிபர் ட்ரம்ப் இறுதி செய்​துள்​ளார். இதற்​காக இந்​தி​யப் பிரதமர் மோடி​யுடன் அவர் நேரடி​யாகவே பேசி உள்​ளார்.

மேலும், அமெரிக்க எரிசக்​தி, போக்​கு​வரத்து மற்​றும் விவ​சாயப் பொருட்​களை வாங்​கு​வதற்​காக இந்​தியா 500 பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் அளவுக்கு செல​விட​வுள்​ளது என்றார்.

<div class="paragraphs"><p>ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்</p></div>
‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ - எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in