“சதிகளை முறியடித்து வங்கதேசம் திரும்புவேன்” - இந்தியாவில் 2 ஆண்டாக வசிக்கும் ஷேக் ஹசீனா தகவல்

“சதிகளை முறியடித்து வங்கதேசம் திரும்புவேன்” - இந்தியாவில் 2 ஆண்டாக வசிக்கும் ஷேக் ஹசீனா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ச​தி​களை முறியடித்து இந்த ஆண்டே வங்​கதேசம் திரும்​புவேன் என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரி​வித்​துள்​ளார். வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஷேக் ஹசீனா தலை​மையி​லான அரசுக்கு எதி​ராக மாணவர்​கள் போராட்​டம் வெடித்தது. இதனால், பிரதமர் பதவியி​லிருந்து வில​கி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்​பர் மாதம், வங்​கதேசத்​தின் சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் ஷேக் ஹசீ​னா​வுக்கு மனிதநேயத்துக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​பட்​ட​தாகக் கூறி மரண தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

இதுகுறித்து ஷேக் ஹசீனா தனி​யார் செய்தி தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: எனக்கு எதி​ராக வழங்​கப்​பட்ட தீர்ப்பு அநீ​தி​யானது. இது சட்​ட​விரோத​மான, அரசி​யலமைப்​புக்கு எதி​ரான மற்​றும் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்ட ஒரு நடவடிக்கை​யாகும்.

எங்​களு​டைய அவாமி லீக் கட்​சி​யைத் தலை​வர் அற்றதாக மாற்​று​வதற்​காக, அரசி​யல் பழி​வாங்​கலின் கரு​வி​யாக நீதித்​துறை பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இது​போன்ற முயற்​சிகள் கடந்த காலங்​களி​லும் நடந்​துள்​ளன. அவை அப்​போதும் தோல்​வியடைந்​தன, இப்​போதும் தோல்​வியடை​யும்.

எனக்கு மரண பயம் கிடை​யாது. 1975-ல் எனது பெற்​றோர், சகோதரர்​கள் என ஒட்​டுமொத்த குடும்​பத்​தை​யும் இழந்​தேன். கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கூட, கையெறி குண்டு தாக்​குதல் மூலம் என்​னைக் கொல்ல முயற்சி நடந்​தது. எனக்கு எதி​ராகப் பல சதித்திட்​டங்​கள் தீட்​டப்​பட்​டன. ஆனால், அத்​தனை சதிவலைகளை​யும் உடைத்து நான் வங்​கதேச மக்​களின் பக்​கம் நின்​றேன்.

மக்​களின் வாக்​கு​கள் மூலம் 5 முறை பிரதம​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டு, நாட்​டின் வளர்ச்​சிக்​காக உழைத்​தேன். எனது ஒட்​டுமொத்த வாழ்க்​கை​யும் வங்​கதேச மக்​களோடும், அவாமி லீக் கட்​சி​யோடும், ஜனநாயகப் போராட்​டத்​தோடும் பிணைந்​துள்​ளது. எனவே, நான் தெளி​வாகக் கூறுகிறேன்: அனைத்து தடைகளை​யும் சதி​களை​யும் முறியடித்​து, இந்த ஆண்டே நான் என் தாய்​நாட்டுக்குத் திரும்​புவேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

“சதிகளை முறியடித்து வங்கதேசம் திரும்புவேன்” - இந்தியாவில் 2 ஆண்டாக வசிக்கும் ஷேக் ஹசீனா தகவல்
சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in