கோஹினூர் வைரத்தை திருப்பி அளிக்கும்படி இங்கிலாந்து மன்னர் சார்லஸிடம் கூறுவேன்: நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி தகவல்

கோஹினூர் வைரத்தை திருப்பி அளிக்கும்படி இங்கிலாந்து மன்னர் சார்லஸிடம் கூறுவேன்: நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி தகவல்
Updated on
1 min read

நியூயார்க்: இங்கிலாந்து மன்னர் மூன்​றாம் சார்​லஸ், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். அவர் அமெரிக்​கா​வின் நாடாளு​மன்​றத்​தி​ல் உரை​யாற்​றி​னார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோ​ருக்கு வெள்ளை மாளி​கை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருந்தளித்தார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க், மான்​ஹாட்​டன் உட்பட பல இடங்களுக்கு சார்​லஸ் செல்​கிறார். நியூ​யார்க் வரும் சார்​லஸை, அதன் மேயர் ஜோரன் மம்​தானி வரவேற்க வேண்​டும். அப்​போது அவரிடம், மன்​னர் சார்​லஸை சந்​தித்து பேசி​னால், அவரிடம் என்ன கூறு​வீர்​கள் என நிருபர் ஒரு​வர் கேள்வி எழுப்​பி​னார்.

இதற்கு பதில் அளித்த மம்​தானி, ‘மன்​னர் சார்​லஸை தனி​யாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்​தால், கோஹினூர் வைரத்தை திருப்பி அளிக்​கும்​படி கூறு​வேன்” என்​றார். கோஹினூர் வைரத்தை இங்​கிலாந்து ராணி விக்​டோரி​யா​வுக்​கு, இந்​தி​யா​வின் சீக்​கிய மன்​னர் துலீப் சிங் கடந்த 1849-ம் ஆண்டு வழங்​கி​னார்.

இது 105.6 கேரட் மதிப்​புடையது. இதை இங்​கிலாந்து ராணி கடந்த 1937-ம் ஆண்டு தனது கிரீடத்​தில் பொருத்தி அணிந்​தார். தற்​போது இது லண்​டன் டவரில் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்தியாவில் இருந்து இங்​கிலாந்து ராணி​யிடம் சென்ற கோஹினூர் வைரத்தை திரும்ப பெறும் முயற்​சி​யில் இந்​தியா ஈடுபட்​டுள்​ளது. இதற்கு இன்​னும் தீர்வு காணப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், இங்​கிலாந்து மன்​னர் சார்​லஸை தனி​யாக சந்​தித்து பேசி​னால், கோஹினூர் வைரத்தை இந்​தி​யா​விடம் திரும்​பத் தரும்​படி கூறு​வேன் என நியூ​யார்க் மேயர் மம்​தானி கூறி​யுள்​ளது குறிப்பிடத்தக்கது.

கோஹினூர் வைரத்தை திருப்பி அளிக்கும்படி இங்கிலாந்து மன்னர் சார்லஸிடம் கூறுவேன்: நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி தகவல்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in