அமெரிக்க போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி?

மஜித் ஏவு​கணை

மஜித் ஏவு​கணை

Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. ஈரான் வான் பரப்​பில் நேற்று முன்​தினம் பறந்த அமெரிக்​கா​வின் யு.எஸ். ஏ-10 வார்​ஹோக், எப்​-15இ ரகப் போர் விமானங்​களை அந்த நாட்டு ராணுவம் ஏவு​கணை​கள் மூலம் தாக்​கியது.

இதில் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பறந்த ஏ-10 வார்​ஹோக் போர் விமானம் ஈரான் வான் எல்​லை​யைத் தாண்டி பெர்​சிய வளை​குடா பகு​தி​யில் விழுந்​தது. அந்த போர் விமானத்​தின் விமானி பாராசூட் மூலம் உயிர் தப்​பி​னார்.

ஈரானின் தெற்​குப் பகு​தி​யில் பறந்த எப்​-15இ ரகப் போர் விமானத்​தில் இருந்த இரு விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்​பினர். இதில் ஒரு விமானி அமெரிக்க ராணுவ ஹெலி​காப்​டர் மூலம் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டார். காணாமல் போன மற்​றொரு விமானியை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இதனிடையே அமெரிக்க விமானியை தேடும் பணி​யில் ஈரான் ராணுவ​மும் தீவிர​மாக ஈடு​பட்டு உள்​ளது. அவரை கண்​டு​பிடித்து தரும் நபருக்கு 10 லட்​சம் ரியால் (ரூ.55 லட்​சம்) பரிசு வழங்​கப்​படும் என்று ஈரான் அரசு அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: ஈரானின் வான் பாது​காப்பு கவசங்​களை அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் அழித்​து​விட்​டன. எனினும் மஜித் ஏவு​கணை கட்​டமைப்பை ஈரான் ராணுவம் தொடர்ந்து பயன்​படுத்தி வரு​கிறது. இது வானில் 20 மீட்​டர் முதல் 6 கி.மீ. உயரத்​தில் பறக்​கும் போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​களைத் தாக்​கும் திறன் கொண்டவை.

இந்த ஏவு​கணை​கள் வாக​னங்​களில் பொருத்​தப்​பட்டு ஆங்​காங்கே நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன. வாக​னத்​தில் உள்ள கண்​காணிப்​புக் கரு​வி​யின் மூலம் குறை​வான உயரத்​தில் பறக்​கும் போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​களைத் துல்​லிய​மாக அடை​யாளம் காண முடி​யும்.

அமெரிக்​கா​வின் ஏ-10 வார்​ஹோக், எப்​-15இ ரகப் போர் விமானங்​கள், மஜித் ஏவு​கணை​கள் மூலமே சுட்டு வீழ்த்​தப்​பட்டு உள்​ளன. இந்த ஏவு​கணை​கள், ரேடார் அடிப்​படை​யில் செயல்​ப​டா​மல் வெப்​பத்​தின் மூலம் எதிரி​களின் இலக்​கு​களைக் கண்​டறிந்து தாக்​கு​கிறது. ரேடார் சிக்​னலை வெளி​யி​டாத ஏவு​கணை​கள் என்​ப​தால் போர் வி​மானங்​களால் இவற்றைக் கண்​டறிவது மிக​வும்​ கடினம்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>மஜித் ஏவு​கணை</p></div>
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்த்து புதிய வழியில் கடந்து வந்த 4 சரக்குக் கப்பல்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in