

புதுடெல்லி: மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஜூலை 7ம் தேதி லைபீரியாவைச் சேர்ந்த எம்வி எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பலை சிறைபிடித்தனர். அதில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அனில்குமார் ரவீந்திரன் உள்ளிட்ட ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில் பிடித்து வைக்கப்பட்டிருந்த அனில்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது. புதன்கிழமை மஸ்கட் வந்தடைந்த அனில்குமார், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளார்" என கூறப்பட்டுள்ளது.