பீட்டா அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பீட்டா இந்தியா அமைப்பு மற்றும் தி குரோவ் பள்ளி சார்பில், விலங்குகளின் மீதான இரக்கத்தை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் தத்ரூபமாக பேசும் யானை ரோபோ பொம்மையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதை ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

பீட்டா இந்தியா அமைப்பு மற்றும் தி குரோவ் பள்ளி சார்பில், விலங்குகளின் மீதான இரக்கத்தை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் தத்ரூபமாக பேசும் யானை ரோபோ பொம்மையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதை ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: பீட்டா அமைப்பு சார்​பில், பள்ளி மாணவர்களுக்​கு, யானை​கள் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

பள்ளி மாணவர்​கள் இடையே யானை​கள் துன்​புறுத்​தப்​படு​வதைத் தடுக்​க​வும், அதனை சுதந்​திர​மாக இருக்க உதவ வேண்​டும் என்​பதை வலி​யுறுத்​தி, பீட்டா இந்​தியா அமைப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்​சியை மேற்​கொண்டு வருகிறது.

சென்​னை, ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் உள்ள தி குரோவ் பள்​ளி​யில் நேற்று இந்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடை​பெற்​றது. எல்லி என்ற பெயரில் யானை போல் ரோபோவை உரு​வாக்​கி, அதன்​மூலம் விழிப்​புணர்வை ஏற்​படுத்தி வரு​கிறது.

இந்த ரோபா யானை கண் சிமிட்​டு​வது, காதுகள் மற்​றும் தும்​பிக்​கையை அசைத்​த​படி உண்​மை​யான யானை நேரடி​யாக உரை​யாடி விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது போல வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ரோபோட்​டிக் யானை, சென்னை நகரங்​களில் உள்ள பள்​ளி​களில் வரும் 19-ம் தேதி வரை வலம் வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிகழ்ச்​சி​யில், குரோவ் பள்ளி தலை​வர் நந்​திதா கிருஷ்ணா, முதல்​வர் சுஜாதா ஆகியோர் கலந்​துக் கொண்​டனர்.

<div class="paragraphs"><p>பீட்டா இந்தியா அமைப்பு மற்றும் தி குரோவ் பள்ளி சார்பில், விலங்குகளின் மீதான இரக்கத்தை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் தத்ரூபமாக பேசும் யானை ரோபோ பொம்மையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதை ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in