ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில்: அனல் காற்றால் 1,300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில்: அனல் காற்றால் 1,300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழப்பு
Updated on
1 min read

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் இது​வரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வரு​கிறது. இதனால் அனல் காற்று வீசி வரு​கிறது. பல நாடு​களில் 40 டிகிரி செல்​சி​யஸ் கொளுத்​துகிறது. அனல் வெயி​லால் பாதிக்​கப்​பட்டு ஆயிரக்​கணக்​கான மக்​கள் மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஐரோப்​பிய நாடு​களான போலந்​து, ஜெர்​மனி, சுவிட்​சர்​லாந்​து, பிரான்​ஸ், டென்​மார்க் நாடு​களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவ​தால் கடந்த 21-ம் தேதி முதல் தற்​போது வரை 1,300 பேர் உயி​ரிழந்​துள்​ளனர் என உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெயில், அனல் காற்று காரண​மாக பல உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. அங்​குள்ள மருத்​து​வ​மனைகளில் அதிக அளவி​லான மக்​கள் வெயில், அனல் காற்று பாதிப்பு பிரச்​சினை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

கடந்த 18-ம் தேதி முதல் பிரான்​ஸில் மட்​டும் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்​போது பிரான்​ஸில் வெப்ப அளவு குறைந்துள்ள போதி​லும், ஜூலை மாதத்​தில் மற்​றொரு வெப்ப அலை வீசக்​கூடும் என்று அந்​நாட்​டின் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்​துள்​ளது.

இதே​போல் ஹங்​கேரி, ஜெர்​மனி, செக் குடியரசு நாடு​களில் 41 டிகிரி செல்​சி​யஸுக்​கும் அதி​க​மான வெப்​பம் பதி​வாகி​யுள்​ளது. ஹங்​கேரி​யில் வெயில் அதி​கரித்​துள்​ள​தால் அந்​நாட்​டின் அரசு ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு பிரதமர் பீட்​டர் மக்யார் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

மேலும், பொதுச் சேவை​யில் ஈடு​படு​வோர் வெளிப்​புறப் பணி​களுக்​கான நேரத்தை மாற்​றியமைக்​கு​மாறும், உணவகங்​கள் அதிக அளவில் குடிநீரை வழங்​கு​மாறும், குளிரூட்​டப்​பட்ட பொது இடங்​களைத் தொடர்ந்​து திறந்​திருக்​கு​மாறும்​ அவர்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளார்​.

ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில்: அனல் காற்றால் 1,300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ - வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in