ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ஜெருசலேம்: வடக்கு காசா பகு​தி​யில் இஸ்ரேல் ராணுவம் அண்மை​யில் நடத்​திய வான்​வழித் தாக்​குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரிவுத் தலை​வர் உள்​ளிட்ட இருவர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்ரேல் பாது​காப்​புப் படை (ஐ.டி.எஃப்) அறி​வித்​துள்​ளது.

பொது​மக்​களுக்கு நேரடி அச்​சுறுத்​தலாக விளங்​கிய ஹமாஸ் அமைப்​பினரை ஒழிக்​கும் நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக, கடந்த செவ்​வாய்க்​கிழமை வடக்கு காசா பகு​தி​யில் இஸ்​ரேலியப் படைகள் தாக்​குதல் நடத்​தி​யது.

இதில், ஹமாஸ் அமைப்​பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரி​வின் முக்கிய தளப​தி​யான ஃபாரெஸ் அல்​-மஸ்ரி என்​பவர் உயி​ரிழந்​தார். போர் நிறுத்த ஒப்​பந்​தத்தை மீறி, ஹமாஸ் அமைப்​பின் ராணுவ வலிமையை மீண்​டும் கட்​டமைக்​கும் நோக்​கில் ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யும் பணி​யில் அவர் தீவிர​மாக ஈடு​பட்டு வந்​த​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

‘நுஜ்​பா’ படை வீரர் பலி

அதே நாளில் வடக்கு காசா​வில் நடத்​தப்​பட்ட மற்​றொரு வான்வழித் தாக்​குதலில், முகமது அபு ஷாகியன் என்​பவர் கொல்லப்பட்டார். இவர் ஹமாஸ் அமைப்​பின் சிறப்பு கமாண்டோ பிரி​வான ‘நுஜ்​பா’ படை​யில் பணி​யாற்றி வந்​தவர் என அடையாளம் காணப்​பட்​டு உள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்கலாம்: அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in