தேடப்படும் குற்றவாளி பட்டியலில் கோல்டி பிரார்: 1 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்த எஃப்.பி.ஐ

சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார்

சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார்

Updated on: 
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிராரை தேடப்படும் 10 குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார் என்று அறிவித்துள்ளது.

மேலும், அவரை கைது செய்வது தொடர்பாக தகவல் அளிப்பவருக்கு 1 மில்லியன் டாலர் சன்மானமும் அறிவித்துள்ளது.

தெற்கு கலிபோர்னியா மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டுக்கு ஆளான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிராருக்கு தொடர்புடையது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வருகிறார் என்று எஃப்.பி.ஐ கூறியுள்ளது.

சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிராருக்கு பல்வேறு அரசியல் மற்றும் சமய பிரமுகர்களின் கொலைகள், துப்பாக்கிச் சூடு, கடத்தல், தாக்குதல், பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உள்ளதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அவர் ஆபத்தானவர் என்றும், ஆயுதம் கொண்டிருப்பவர் என்றும், தப்பியோடி கொண்டிருப்பதாகவும் எஃப்.பி.ஐ தகவல்.

வட அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அவருக்கு இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களுக்கு உலகளவில் கோல்டி பிரார் உதவி செய்து வருவதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அரங்கேறும் திட்டமிடப்பட்ட சில படுகொலை சமவாங்களுக்கு மூளையாக கோல்டி பிரார் அறியப்படுகிறார். பாஞ்சாபில் கடந்த 2022-ல் ராப் இசை பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் கனடா​வில் கடந்த 2023-ல் சீக்கிய ஆர்வலர் ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கோல்டி பிராருக்கு தொடர்புடையதாக குற்றச்சாட்டு உள்ளது.

<div class="paragraphs"><p>சதிந்தர்ஜீத் சிங் என்கிற கோல்டி பிரார்</p></div>
‘புலம்பெயர்ந்தோரை குடும்பத்தினராக கருதுவீர்’ - ஐரோப்பியர்களுக்கு போப் லியோ அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in