பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு

பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு
Updated on: 
1 min read

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜி​யத்​தில் கழிவுநீர்க் குழாய் அமைக்க பள்​ளம் வெட்​டிய​போது ரூ.99 கோடி மதிப்​பிலான தங்​கப் புதையல் கண்டெடுக்​கப்​பட்​டது.

பெல்​ஜி​யம் தலைநகர் பிரஸ்​ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள சின்ட் - கில்​லிஸ்​-டெண்​டர்​மொன்டே பகு​தி​யில், ஒரு மது​பான உற்​பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்​பட்டு வந்​தது. தற்​போது, அந்​தப் பழமையான கட்​டிடம் முழு​மை​யாகப் புதுப்​பிக்​கப்​பட்டு வருகிறது. தற்​போது அந்​தக் கட்​டிடம் ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்​புக்கு சொந்​த​மாக உள்​ளது. அங்கு புதிய அலு​வல​கங்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களை கட்​டும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், அண்​மை​யில் அங்​குள்ள பழைய கழி​வுநீர் குழாய்​களை மாற்றி புதிய கழி​வுநீர் குழாய்​களை அமைப்​ப​தற்​காக பூமி​யில் பள்​ளம் தோண்​டினர். அப்​போது, அங்கு தங்​கப் புதையல் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. கட்​டிடத்​தின் செங்​கல் சுவருக்கு மத்​தி​யில் இருந்த இதை 18 வயதான கோபெ என்ற பணி​யாளர் கண்​டெடுத்​தார்.

அந்​தப் புதையலில் சுமார் 50 தங்​கக் கட்​டிகளும், நூற்​றுக்​கணக்​கான தங்க நாண​யங்​களும் இருந்​தன. இவற்​றின் மதிப்பு சுமார் 9 மில்​லியன் யூரோக்​கள் (சுமார் ரூ.99 கோடி) என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்​தக் கட்​டிடம் 19-ம் நூற்​றாண்​டின் பிற்​பகு​தி​யில், அப்​பகு​தி​யில் செல்​வந்​த​ராக இருந்த மது​பானத் தயாரிப்பு குடும்​பத்​தைச் சேர்ந்த தியோபிலஸ் வான் ஆஷே என்​பவருக்​காக கட்​டப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது.

தங்​கப் புதையல் குறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரஸ்​ஸல்ஸ் நகரிலுள்ள அரசு பாது​காப்பு மையத்​துக்கு தங்​கப் புதையல் கொண்டு செல்லப்பட்டு பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்த தங்​கத்​துக்கு யார் உரிமை கோரப் போகிறார்​கள் என்ற ஆவல் எழுந்​துள்​ளது. வான் ஆஷே குடும்​பத்​தின் வாரிசுகள், தாங்கள் இந்​தச் செல்​வத்​துடன் சட்​டப்​பூர்​வ​மாகத் தொடர்புடையவர்​கள் என்​பதை நிரூபித்​தால், அவர்​களுக்கு இந்த தங்​கம் கிடைக்​கலாம்.

பெல்​ஜி​யம் நாட்டு சட்​டத்​தின் கீழ், உரிமை​யாளர்​கள் தங்​கள் உரிமையை நிலை​நாட்ட 5 ஆண்​டு​கள் அவகாசம் வழங்கப்படுவது குறிப்​பிடத்​தக்​கது. வரும் 2031-ம் ஆண்​டுக்​குள் முறை​யான உரிமை​யாளர் யாரும் கண்​டறியப்​பட​வில்லை என்றால், இந்த செல்​வம் அதைக் கண்​டெடுத்​தவர்​களுக்​கும், தற்போதுள்ள அந்​தச் சொத்​தின் உரிமை​யாள​ருக்​கும் இடையே பகிர்ந்து அளிக்​கப்​பட வாய்ப்​புள்​ளது.

பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு
5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...

X