மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன்: சீன விஞ்ஞானிகள் அசத்தல்

மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன்: சீன விஞ்ஞானிகள் அசத்தல்
Updated on
1 min read

பெய்ஜிங்: மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையை சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும். இந்த முள் உருவாக்கத்துக்கு ‘ரன்எக்ஸ்2பி’ என்ற மரபணுதான் காரணம் என கண்டறியப்பட்டது.

சிஆர்ஐஎஸ்பிஆர், சிஏஎஸ் என்ற மூலக்கூறு கத்தரி மூலம் முள் வளர்ச்சிக்கு காரணமான இந்த மரபணு நீக்கப்பட்டது. அதன்பின் ‘கிபல் கார்ப்’ மீன் குஞ்சுகளை உருவாக்கியபோது, முற்றிலும் முள் இல்லாத மீன் உருவானது. இந்த மரபணு

மாற்றம் மூலம் மீனின் இயல்பான வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மீன் தற்போது சீனாவில் பிரபலமடைந்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கை மீன்வளர்ப்பு இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் ‘ஜோங்கே எண்.6’ என்ற மீன் வகையிலும் மரபணு மாற்றம் செய்து முள் இல்லாத மீனாக உருவாக்கி யுள்ளனர். இவற்றில் இருந்த சிஜிரன்எக்2பி-ஏ மற்றும் பி மரபணுதான் முள் வளர்ச்சிக்கு காரணம் என கண்டறியப்பட்டு அதில் மாற்றம் செய்யப்பட்டது.

மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன்: சீன விஞ்ஞானிகள் அசத்தல்
மகாராஷ்டிராவில் சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in