சீனாவில் சக ஊழியரின் புற்றுநோய் சிகிச்​சைக்கு நன்கொடை:​ ஒரு​நாள் வருமானத்தை அளித்த வியாபாரிகள்!

சீனாவில் சக ஊழியரின் புற்றுநோய் சிகிச்​சைக்கு நன்கொடை:​ ஒரு​நாள் வருமானத்தை அளித்த வியாபாரிகள்!
Updated on
1 min read

ஃபுசோ: சக ஊழியரின் புற்று நோய் சிகிச்​சைக்​காக, தங்​களின் ஒரு நாள் வரு​மானம் முழு​வதை​யும் சீனா​வின் ஃபுசோ பகு​தி​யில் உள்ள தெரு​வோர உணவு வியா​பாரி​கள் நன்​கொடை​யாக வழங்கினர்.

சீனா​வின் ஃபியூஜி​யான் மாகாணத்​தின் ஃபுசோ நகரில் ஃபியூஜி​யான் பல்​கலைக்​கழகம் அருகே தெரு​வோர உணவகங்​கள் பல உள்​ளன. இங்கு ‘அங்​கிள் பிரைட் கேக்’ என்ற பெயரில் உணவகம் நடத்​துபவர் ஜாங் ஜியான்வு (50). இவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து இவர் கடையை மூடி​விட்டு சிகிச்​சைக்​காக உள்​ளூர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சிகிச்​சைக்கு அதிக பணம் தேவைப்​பட்​ட​தால் ஜாங் ஜியான்வு குடும்​பத்​தினர் ஆன்​லைன் மூலம் நிதி​யுதவி கோரினர். இதைப் பார்த்த ஃபியூஜி​யான் பல்​கலைக்​கழக மாணவர்​கள் இத்​தகவலை பலருக்கு சமூக ஊடகங்​கள் மூலம் பரப்​பினர்.

இதற்​கிடையே ஜாங் ஜியான்​வு​வின் நிலை​மையை அறிந்த சக வியா​பாரி​கள் அவருக்கு நிதி​யுதவி அளிக்க முன்​வந்​தனர். இவர்களில் பலர் ஜாங் ஜியான்​வுக்கு தொழில்​முறை போட்​டி​யாளர்​கள். ஆனால், அவர்​களும் ஜாங் ஜியான்​வுக்கு உதவ முடிவு செய்​தனர். அனை​வரும் கடந்த 10-ம் தேதி தங்​கள் கடை​யின் க்யூ ஆர் கோடை மாற்றி ஜாங் ஜியான்​வு​வின் க்யூ ஆர் கோடை ஒட்டினர். இதன் மூலம் ஒவ்​வொரு வாடிக்​கை​யாளர் செலுத்​தும் பணமும் ஜாங் ஜியான்​வு​வின் வங்கி கணக்​குக்கு நேரடி​யாக சென்றது.

சில கடைகள் உணவு வகைகளுக்கு 20 சதவீத தள்​ளு​படி வழங்கி கூட்​டத்தை சேர்த்​தனர். உணவகங்​களுக்கு வந்த வாடிக்​கை​யாளர்​களும் உணவின் விலை​யை​விட கூடு​தலாக செலுத்​தினர். அனைத்து உணவகங்​களின் ஒரு நாள் வரு​மான​மாக 20,000 யுவான் (ரூ.2,56,000) ஜாங் ஜியான்​வுக்கு கிடைத்​தது. இந்த ஆதரவு தனது கணவர் மீண்டு வர நம்​பிக்​கையை அளித்​துள்​ள​தாக கூறிய ஜாங் ஜியான்​வு​வின் மனைவி அனை​வருக்​கும்​ நன்றி தெரிவித்தார்.

சீனாவில் சக ஊழியரின் புற்றுநோய் சிகிச்​சைக்கு நன்கொடை:​ ஒரு​நாள் வருமானத்தை அளித்த வியாபாரிகள்!
பறவைகள் கணக்கெடுப்பு பணி: பங்கேற்க வனத்துறை அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in