பறவைகள் கணக்கெடுப்பு பணி: பங்கேற்க வனத்துறை அழைப்பு

பறவைகள் கணக்கெடுப்பு பணி: பங்கேற்க வனத்துறை அழைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்’ என்று தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பறவைகள் பாதுகாப்பு, கண்காணிப்பு என்பது மிக முக்கியப் பணியாக உள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதேபோல், பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப்பல்வகைமையை கண்காணிப்பதற்காக மாநில அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025–26-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை 2 கட்டங்களாக நடத்த தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பும் (உள்நாட்டு பறவைகள் மற்றும் கடலோர ஈரநிலங்களில் உள்ள பறவைகள்), இரண்டாம் கட்டமாக நிலப்பரப்பிலுள்ள பறவைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

தமிழகத்தில் வலசை வரும் பறவைகளின் காலம் பொதுவாக அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்பதால், நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வன கோட்டத்திலும் குறைந்தபட்சம் 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்பட கலைஞர்கள், கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே தங்களது பெயர்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழங்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

க்யூஆர் குறியீடு:

பறவைகள் கணக்கெடுப்பு பணி: பங்கேற்க வனத்துறை அழைப்பு
சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in