புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ - அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்

புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ - அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்
Updated on
2 min read

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இலு​யுஷின் ஐஎல் - 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். இந்த விமானம், ‘பறக்​கும் அதிபர் மாளி​கை’ என்று அழைக்​கப்​படு​கிறது.

இதில் 4 இன்​ஜின்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. ஒரு​முறை எரிபொருளை நிரப்​பி​னால் 13,000 கி.மீ. வரை விமானம் தரை​யிறங்​காமல் பறக்க முடி​யும். நடு​வானிலேயே விமானத்​துக்கு எரிபொருளை நிரப்ப முடி​யும்.

அதிபர் புதினின் விமானத்​தில் மிகப்​பெரிய கருத்​தரங்கு கூடம், பல்​வேறு அறை​கள், சொகுசு படுக்கை அறை, தங்க முலாம் பூசப்​பட்ட குளியல் அறை, மது​பான பார், உடற்​ப​யிற்​சிக்​கூடம், மருத்​துவ சிகிச்சை அறை உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் உள்​ளன.

எதிரி​களின் தாக்​குதல்​களை முறியடிப்​ப​தற்​காக விமானத்​தில் அதிநவீன ஏவு​கணை​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. இந்த விமானத்​தில் பறந்​த​படியே அணு குண்டு தாக்​குதல் நடத்த அதிபர் புதி​னால் உத்​தர​விட முடி​யும்.

இதற்​காக விமானத்​தில் சிறப்பு கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்டு இருக்​கிறது. தகவல் தொடர்​புக்​காக அதிநவீன செயற்​கைக்​கோள் தொலைபேசி வசதி செய்​யப்​பட்டு இருக்​கிறது. தேவைப்​பட்​டால் எதிரி​களின் ரேடார் கண்​காணிப்​பில் இருந்து விமானத்தை மறைந்து போக செய்ய முடி​யும்.

இந்த விமானம் 55.35 மீட்​டர் நீளம், 17.55 மீட்​டர் உயரம் கொண்​டது. இதன் எடை 250 டன் ஆகும். விமானத்​தில் ஒரே நேரத்​தில் 262 பேர் வரை பயணம் செய்ய முடி​யும்.

குறிப்​பாக அதிபர் புதினின் பாது​காவலர்​கள், அதிபர் மாளிகை அதி​காரி​கள், மூத்த மருத்​து​வர்​கள் உட்பட சுமார் 100 பேர் விமானத்​தில் பயணம் மேற்​கொள்​வார்​கள். புதினின் விமானத்​துக்கு பாது​காப்​புக்​காக சுகோய் 35 போர் விமானங்​கள் இரு​புற​மும் அணிவகுத்து செல்​லும்.

ஒரு​வேளை புதின் செல்​லும் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டால் ரஷ்​யா​வின் விமானப் படை தளங்​கள் அல்​லது நட்பு நாடு​களின் விமானப் படை தளங்​களில் தரை​யிறக்​கப்​படும்.

ஒவ்​வொரு பயணத்​தின்​போது இலு​யுஷின் ஐஎல் - 96 - 300 பியூ ரகத்தை சேர்ந்த மற்​றொரு சொகுசு விமான​மும் உடன் செல்​லும். அந்த மாற்று விமானத்​தில் அதிபர் புதின் பயணத்தை தொடர்​வார்.

இந்​திய சுற்​றுப் பயணத்​துக்​காக நேற்று முன்​தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் இருந்து இலு​யுஷின் ஐஎல் - 96 - 300 பியூ விமானத்​தில் அதிபர் புதின் டெல்​லிக்கு புறப்​பட்​டார்.

அப்​போது உலகம் முழு​வதும் இருந்து லட்​சக்​கணக்​கானோர் அவரது விமானம் செல்​லும் பாதையை ரேடாரில் கண்​காணித்​தனர். அவரது விமானம் ரஷ்​யா, கஜகஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், தஜிகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் வான்​பரப்பு வழி​யாக இந்​திய தலைநகர் டெல்​லியை வந்​தடைந்​தது.

அவர் எந்த நாட்​டுக்கு சென்​றாலும் அங்கு தங்​கும் ஓட்​டலின் குளியல் அறை, கழிப்​பறையை பயன்​படுத்​து​வது கிடை​யாது. அவருக்​காக சிறப்பு குளியல் அறை, கழிப்​பறையை ரஷ்ய தொழில்​நுட்ப நிபுணர்​கள் அமைப்​பார்​கள்.

ரஷ்​யா​வில் இருந்து கொண்டு வரப்​படும் உணவு பொருள்​கள், அழகு சாதன பொருட்​களை மட்​டுமே அவர் பயன்​படுத்​து​வார். அவரின் பயணத்​துக்​காக ஆரஸ் செனட் ரக சொகுசு கார், சரக்கு வி​மானத்​தில் கொண்டு வரப்​படும். வெளி​நாட்டு பயணத்​தின்​போது அதிபர்​ புதினை சுற்​றி 4 அடுக்​கு பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​படும்​.

புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ - அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in