‘ஃபிளை துபாய்’ துணை விமானி விமானத்தை இயக்க ஓமன் தடை விதித்ததாக தகவல்

‘ஃபிளை துபாய்’ துணை விமானி விமானத்தை இயக்க ஓமன் தடை விதித்ததாக தகவல்
Updated on: 
1 min read

துபாய்: ‘ஃபிளை துபாய்’ பயணிகள் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனைச் சேர்ந்த துணை விமானி, விமானத்தை இயக்க ஓமன் தடை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை விமானியின் தீவிரவாத சிந்தனை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனமான ஃபிளை துபாய், அவரை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தியது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், “தூதரக உறவு இல்லாத நாடுகளின் பைலட்கள் இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று ஃபிளை துபாய் விமான நிறுவனத்துக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் அந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் விமானக் கடத்தல் முயற்சி நடைபெற்று இருக்கிறது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் எங்கள் அக்கறையை எடுத்துரைத்துள்ளோம். இனி வரும் காலங்களில் பைலட்டுகளின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓமனைச் சேர்ந்த துணை விமானியை சவுதி அரேபியா போலீஸார் கைது செய்து, ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓமன் துணை விமானி தீவிரவாத சிந்தனை கொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், துபாய் மற்றும் டெல் அவிவ் இடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்.

‘ஃபிளை துபாய்’ துணை விமானி விமானத்தை இயக்க ஓமன் தடை விதித்ததாக தகவல்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு: இன்றைய சந்தை நிலவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in