உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ம் இடம்

தனுசியா செட்டி

தனுசியா செட்டி

Updated on
1 min read

நியா ட்ராங்: டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்​டத்தை வென்​றார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர். அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.

அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். அவரது தாய்​மொழி தமிழ் ஆகும். அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.

வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

<div class="paragraphs"><p>தனுசியா செட்டி</p></div>
“பத்தோடு பதினொன்றாக இருக்க விருப்பம் இல்லை; ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்குவதே இலக்கு” - அண்ணாமலை திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in