சட்டவிரோத வழிகள் மூலம் மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம்: சீக்கிய இளைஞர் வேண்டுகோள்

சட்டவிரோத வழிகள் மூலம் மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம்: சீக்கிய இளைஞர் வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: கழுதை வழிப்​பாதை போன்ற சட்​ட​விரோத வழிகள் வழி​யாக மெக்​சிகோவுக்​குள் யாரும் நுழைய வேண்​டாம் என்று சீக்​கிய இளைஞர் ஒரு​வர் வீடியோ மூலம் வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

‘மெக்​சிகோ​வில் இந்​திய சீக்​கியர் ஒரு​வருக்கு இழைக்​கப்​பட்ட மோச​மான கொடுமை’ என்ற பெயரில் ஒரு வீடியோ அண்​மை​யில் சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. மெக்​சிகோ​வில் சிக்​கிக் கொண்ட சீக்​கிய இளைஞர் ஒரு​வர் அண்​மை​யில் அந்த வீடியோவை வெளி​யிட்​டார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:

நான் சட்​ட​விரோத​மாக மெக்​சிகோவுக்​குள் கழுதை வழிப்​பாதை வழி​யாக (டாங்கி ரூட்) நுழைய முயன்​றேன்.

நான் பஞ்​சாபை சேர்ந்​தவன். நான் மெக்​சிகோவுக்​குள் நுழைந்து தவறு செய்​து​விட்​டேன். டாங்கி ரூட் வழி​யாக யாரும் இங்கு நுழைய வேண்​டாம். ஏஜென்​ட்டு​களின் பேச்​சைக் கேட்டு ‘டாங்​கி’ வழித்​தடம் வழி​யாக வந்து நம்பி ஏமாற வேண்​டாம். நான் இப்​போது மெக்​சிகோ​வில் சிக்​கித் தவிக்​கிறேன். எனக்கு உதவ யாரும் இல்​லை.

தெரி​யாமல் இந்த வழி​யாக வந்து தப்​பிக்க முயன்​ற​போது நான் தாக்​கப்​பட்​டேன். கடுமை​யாகத் தாக்​கப்​பட்​ட​தால் என்​னால் சரி​யாக நடக்க முடிய​வில்​லை.

சட்​ட​விரோத வழிகள் மூலம் வெளி​நாடு​களுக்​குப் பாது​காப்​பான பயணத்தை உறுதி செய்​வ​தாகக் கூறும் ஏஜென்​ட்டு​களின் வலை​யில் விழ வேண்​டாம்.

நான் செய்த தவறை ஒப்​புக்​கொண்​டேன். அதற்​கான விலையை ஏற்​க​னவே கொடுத்​து​விட்​டேன். என்னை மன்​னி​யுங்​கள்.

இவ்​வாறு அதில் அவர் தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ​வில் இருக்​கும் சீக்​கிய இளைஞரின் பெயரோ அல்​லது முகவரியோ குறிப்​பிடப்​பட​வில்​லை. 33 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கடந்த 13-ம் தேதி சமூக வலை​தளங்​களில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளது.

‘டாங்​கி’ (Donkey) வழித்​தடம் என்​பது, அமெரிக்கா போன்ற நாடு​களுக்​கு மெக்​சிகோ உள்​ளிட்ட பல இடைப்​பட்ட நாடு​கள் வழி​யாக மேற்​கொள்​ளும் ஒரு சட்​ட​விரோத குடியேற்ற வழி​யாகும். இந்​தப் பயணத்​துக்கு ரூ. 20 லட்​சம் முதல் ரூ.70 லட்​சம் வரை செல​வாகலாம் என்று தெரி​கிறது. இதற்​கான கட்​ட​ணம் பெரும்​பாலும் தவணை முறை​யில் செலுத்​தப்​படு​கிறது. பயணம் சுமூக​மாக இருக்​கும் என்று ஏஜென்ட்​டு​கள் சார்​பில் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டாலும், குடியேறிகள் பெரும்​பாலும் சுரண்​டல், வன்​முறை, கட்​டாயப் பணம் பறிப்​பு, சிறைபிடிப்பு மற்​றும் உயிருக்கு ஆபத்​தான அச்​சுறுத்​தல்​களை எதிர்​கொள்​கின்​றனர்.

சமீபத்​திய ஆண்​டு​களில், பஞ்​சாபிலிருந்து கணிச​மான எண்​ணிக்​கை​யி​லான மக்​கள்​ வெளி​நாடு​களில்​ ​வாய்​ப்​பு​களைத்​ தேடி இத்​தகைய வழிகள்​ மூலம்​ அமெரிக்​கா சென்​றுள்​ள​தாக அங்​கிருந்​து தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.

சட்டவிரோத வழிகள் மூலம் மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம்: சீக்கிய இளைஞர் வேண்டுகோள்
ரூ.4,000 கோடி முதலீடு: டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in