அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்

அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்
Updated on
1 min read

டெஹ்ரான்: பாது​காப்​பு, அமைதி மற்​றும் வளர்ச்​சியை விரும்​பி​னால், அமெரிக்க ராணுவம் தங்​கள் நாட்​டில் இருந்து செயல்பட வளை​குடா நாடு​கள் அனு​ம​திக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்​கி​யான் கூறி​யுள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தது. இதற்கு பதிலடி கொடுக்​கும் ஈரான், வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் மையங்​கள் மீது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இங்​கிருந்து அமெரிக்க போர் விமானங்​கள் புறப்​பட்டு சென்று ஈரான் மீது தாக்​குதல் நடத்​துகின்​றன.

துபா​யில் தாக்​குதல்: ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவத்​துக்கு உதவி​யாக, ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்​களை உக்​ரைன் வழங்​கி​யுள்​ளது. இந்த ஆயுதங்​கள் துபா​யில் உள்ள ஒரு கிடங்​கில் வைக்​கப்​பட்​டிருந்​தன. அந்த இடத்தை தாக்​குதல் நடத்தி அழித்​துள்​ள​தாக ஈரான் ராணுவ தலை​மையகம் கதம் அல்​-அன்​பியா கூறி​யுள்​ளது. மேலும், துபா​யில் பதுங்​கி​யுள்ள அமெரிக்க ராணுவத்​தினர் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் ஈரான் அதிபர் மசூத் பெஸ்​கி​யான் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ‘‘பாது​காப்​பு, அமைதி மற்​றும் வளர்ச்​சியை விரும்​பி​னால், அமெரிக்க ராணுவம் தங்​கள் நாட்​டில் இருந்து செயல்பட வளை​குடா நாடு​கள் அனு​ம​திக்க கூடாது. நாங்​கள் எப்​போதும் முதலில் தாக்​குதல் நடத்​துவதில்லை. ஆனால், எங்​கள் மீது தாக்​குதல் நடத்தப்​பட்​டால்​, பதிலடி கொடுப்​போம்​’’ என தெரி​வித்​துள்​ளார்​.

பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை தேவை: ஈரான் - அமெரிக்கா இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பாகிஸ்தானில் இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர். இதை வரவேற்றுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரீப்பிடம் பேசுகையில், “போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை தேவை” என கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்
அதிமுக வேட்பாளர்கள் 17 பேர் அறிவிப்பு: 3-ம் கட்ட பட்டியல் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in