ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்
மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதன்படி ரஷ்யாவில் இருந்து தலா 40,000 மெட்ரிக் டன் டீசலுடன் 3 எண்ணெய் கப்பல்கள் நியூயார்க் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டன.
இதுகுறித்து ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியதாவது: ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக 3 எண்ணெய் கப்பல்களில் டீசல் அனுப்பப்பட்டு உள்ளது. அக்டோபரில் 3 லட்சம் மெட்ரிக் டன் டீசலை கொள்முதல் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருக்கிறது. இம்மாதம்் 5 லட்சம் டன் டீசலை அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்தார்.