நேபாள மீட்புப் பணிக்கு கைகொடுக்கும் இந்தியா; உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

நேபாள மீட்புப் பணிக்கு கைகொடுக்கும் இந்தியா; உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது
Updated on
1 min read

காத்மாண்டு: நே​பாளத்​தைப்​ புரட்​டிப்​போட்​ட பெரு​வெள்​ளத்​தில்​ உயி​ரிழந்​தோர்​ எண்​ணிக்​கை 900-ஐ ​தாண்​டி உள்​ளது. மீட்​பு மற்றும்​ தேடு​தல்​ பணி​களுக்​கு தேவை​யான உதவி​களை இந்தியா தொடர்ந்​து வழங்​கி வரு​கிறது.

நே​பாளத்​தில்​ பெரு​வெள்​ளம்​ ​தாக்கி நேற்​றுடன்​ 6 ​நாள்​கள்​ ஆன நிலை​யில்​, தொடர்ச்​சி​யாக மீட்​பு பணி​கள்​ நடந்​து வரு​கின்​றன. சேறு மற்​றும்​ இடி​பாடு​களுக்​கு அடி​யில்​ இருந்​து​ம்​, ஆற்​றங்​கரையோரங்​களில்​ இருந்​து​ம்​ ​கொத்​துக்​ ​கொத்​தாக உடல்​கள்​ மீட்​கப்​பட்​டு வரு​கின்​றன.

இத​னால்​ உயி​ரிழந்​தோரின்​ எண்​ணிக்​கை ​தின​மும்​ அ​தி​கரித்​து ​கொண்​டே செல்​கிறது. அதன்​படி உயி​ரிழந்​தோரின்​ எண்​ணிக்​கை நேற்​று 900-ஐ ​தாண்​டியது. 4 ஆ​யிரத்​துக்​கும்​ மேற்​பட்​டோரின்​ க​தி என்​ன? என்​பது இன்​னு​ம்​ தெரிய​வில்​லை.

அவர்​களை தேடும்​ பணியில்​ மீட்​புக்​ குழுக்​கள்​ தீ​விர​மாக ஈடு​பட்​டுள்​ளன. நே​பாளம்​ பெரு​வெள்​ளத்​தால்​ ​பா​திக்​கப்​பட்​ட ​முதல்​ ​நாளில்​ இருந்​தே இந்தியா அனைத்​து வழிகளி​லும்​ அந்​நாட்​டிற்​கு தேவை​யான உத​வியை​யும்​, ஆதர​வை​யும்​ வழங்​கி வரு​கிறது.

​முதலில்​ ​வி​மானங்​கள்​ மூலம்​ நி​வாரணப்​ பொருட்​களை அனுப்​பி ​வைத்​த இந்​தி​யா, நே​பாள அரசின்​ கோரிக்​கை​யை ஏற்​று சிறப்​பு மீட்​புக்​ குழுக்​களை​யும்​, மருத்​து​வக்​ குழுக்​களை​யும்​ அனுப்​பியது.

மேலும்​, இறந்​த உடல்​களை அடை​யாளம்​ ​காண்​ப​தற்​காக டிஎன்​ஏ ​மா​திரி​களைப்​ பகுப்​பாய்​வு செய்​ய உத​வும்​ வகை​யில்​, 19 பேர்​ ​கொண்​ட இந்​தி​ய தடய​வியல்​ குழு​வும்​ நே​பாளம்​ சென்​றுள்​ளது. சிலிமே மற்​றும்​ லாங்​டாங்​கில்​ உள்​ள நீர்​மின்​ நிலை​யங்​களின்​ சுரங்​கங்​களில்​ சிக்​கி​யிருக்​கும்​ நிலை​யில்​, அவர்​களை பத்​திர​மாக மீட்​ப​தற்​கு இந்​தி​யா​வில்​ இருந்​து சென்​ற சிறப்​பு நிபுணர்​கள்​ குழு தேவை​யான உதவி​களை வழங்​கி வரு​கிறது.

நேபாள மீட்புப் பணிக்கு கைகொடுக்கும் இந்தியா; உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது
தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்க தொடர்ந்து நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in