அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை: கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வு

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை: கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வு
Updated on
1 min read

ஹாங்காங்/புதுடெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் முட்​டுக்​கட்டை நீடிப்​ப​தா​லும், போர்ச் சூழலால் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டிருப்​ப​தா​லும் சர்​வதேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்​வைச் சந்தித்​துள்​ளது. நேற்​றைய வர்த்​தகத்​தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 120 டாலரைத் தாண்டியது.

ஈரான் போர் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக எண்​ணெய் விநி​யோகம் சீரடைவ​தில் சிக்​கல் நீடித்து வரு​கிறது. இதனால் உலகளா​விய அளவில் எரிபொருளுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்படும் நிலை உரு​வாகி​யுள்​ளது. எண்​ணெய் விநியோகத்​தில் தடை நீடித்து வரு​வ​தால் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை நேற்றைய வர்த்​தகத்​தின் ஒரு கட்​டத்​தில் 126 டாலர் வரை சென்றது.

ஜூன் மாத விநி​யோகத்​திற்​கான கச்சா எண்​ணெய் விலை 3.3 சதவீதம் உயர்ந்து 121.90 டால​ராக வர்த்​தக​மானது. இதற்கு முன், கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளா​தார நெருக்​கடி​யின்போது கச்சா எண்​ணெய் விலை 147.50 டால​ராக இருந்​ததே இது​வரை உச்சபட்ச விலை​யாக உள்ளது.

பிப்​ர​வரி இறு​தி​யில் போர் தொடங்​கு​வதற்கு முன்பு ஒரு பேரல் 70 டால​ராக இருந்த கச்சா எண்​ணெய் விலை, தற்​போது போர் நீடிப்பதா​லும், அமெரிக்கா​வின் பொருளா​தா​ரத் தடைகளாலும் ஏறக்​குறைய இரு மடங்கு அதி​கரித்​துள்​ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

சர்​வ​தேச அளவில் நில​வும் போர் அபா​யம் காரண​மாக முதலீட்​டாளர்​கள் டாலரை பாது​காப்​பான முதலீ​டாகக் கருதுகின்​றனர். அதன் எதிரொலி​யாக, நேற்​றைய வர்த்​தகத்​தில் டாலருக்கு எதிரான இந்​திய ரூபா​யின் மதிப்பு 95.20 அளவில் புதிய வரலாற்று சரிவை எட்​டியது.

பங்​குச் சந்தைகள் சரிவு

எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் போர்ச் சூழல் காரண​மாக ஆசிய பங்​குச் சந்​தைகள் பெரும் சரிவைச் சந்​தித்​தன. ஜப்​பானின் நிக்கி 1%, தென் கொரி​யா​வின் கோஸ்பி 1.4% மற்​றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1.3% சரிந்​தன. அதன் தாக்​கம் இந்திய சந்​தைகளில் காணப்​பட்​டது. மும்பை பங்​குச் சந்​தை​யின் சென்​செக்​ஸ்​ நேற்​று​ 0.75% சரிவை சந்​தித்​து.

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை: கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்வு
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in