ஹார்முஸ் ஜலசந்தியில் ஆபத்தான பாதையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி தீப்பற்றியது

ஹார்முஸ் ஜலசந்தியில் ஆபத்தான பாதையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி தீப்பற்றியது
Updated on: 
1 min read

புதுடெல்லி: அனு​ம​திக்​கப்​ப​டாத மற்​றும் ஆபத்​தான பாதை​யில் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளி​யேற முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல், கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்​துச் சிதறி தீப்​பற்​றியது.

இதுகுறித்து ஈரானுக்கு சொந்​த​மான இஸ்​லாமியப் புரட்​சிகர காவல்​படை (ஐஆர்​ஜிசி) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: கச்சா எண்​ணெய் ஏற்​றப்​பட்ட பிரம்மாண்டமான சூப்​பர்​டேங்​கர் கப்​பல் ஒன்று அனுமதிக்கப்படாத மற்​றும் ஆபத்​தான பாதை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தியை விட்டு வெளி​யேற முயன்​றது. அப்​போது, அந்​தக் கப்பல் கடல் கண்​ணிவெடி மீது மோதி வெடித்​துச் சிதறி தீப்பற்றியது.

ஜலசந்​தியை விட்டு வெளி​யேற முயன்​ற​போதும், கடல் கண்ணிவெடி மீது மோது​வதற்கு முன்​பும், அந்த கப்​பல் தனது வழி​செலுத்​தல் மற்​றும் உலகளா​விய இருப்​பிடக் கட்​டுப்​பாட்டு அமைப்​பு​களை (ஜிபிஎஸ்) அணைத்​து​விட்​டது. ஹார்​முஸ் ஜலசந்தியின் பாது​காப்​பை​யும் விதி​முறை​களை​யும் மீற முயலும் எந்​தவொரு எண்​ணெய் கப்​பலுக்​கும் மிகப்​பெரிய தீ காத்திருக்கிறது.

அனு​ம​திக்​கப்​ப​டாத பாதைகளைப் பயன்​படுத்​தும் கப்​பல்​களுக்கு எதி​ரான நடவடிக்கை ஹார்​முஸ் ஜலசந்​தி​யோடு மட்​டும் நின்றுவிடாது. ஒட்​டுமொத்த பிராந்​தி​யத்​தி​லும் அவை பின்​தொடரப்​பட்டு தண்​டிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஈரான் மீது கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்​தது. இதையடுத்​து, உலக நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் கப்​பல் பயணிக்​கும் முக்​கிய கடல்​வழி​யான ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. ஐஆர்​ஜிசி​யின் கட்டுப்பாட்​டில் உள்ள அப்​பகு​தி​யில் கடல் கண்​ணிவெடிகள் வைக்கப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஆபத்தான பாதையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி தீப்பற்றியது
தனியார் கல்வி நிறுவனங்கள் சாதி விவரம் கேட்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in